முதல் பக்கம்

Aug 7, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தின போட்டிகள்-2012



அன்புடையீர்,

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே கல்லாமையைப் போக்குவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்போடு அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை வலியுறுத்தியும் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளையும் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி இயக்கத்தையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வுகளில் தங்கள் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
போட்டிகளின் விபரம் பின்வருமாறு:
பிரிவு
வகுப்பு
தலைப்பு
அளவு
ஓவியம்
6,7,8
போரில்லாத பூமி
30*45செ.மீ.சார்ட்
கட்டுரை
9,10,11,12
அணு-நேற்று இன்று நாளை
4 பக்க அளவில்
கவிதை
கல்லூரி
உயிர் பொசுங்கும் வாடை வீசுதே
25 வரிகளில்
கட்டுரை
ஆசிரியர்/ஆர்வலர்
அணு இன்றி அமையாதா உலகு
4 பக்க அளவில்
மேற்காணும் மாவட்ட அலுவலகத்திற்கு 
 தங்களின் தெளிவான முகவரியுடன்
படைப்புக்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட்,21,2012
:9488011128

No comments:

Post a Comment