முதல் பக்கம்

Aug 11, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தினநிகழ்ச்சிகள் -2012

கடந்த 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்,6,9 தேதிகளில் அமெரிக்கா  ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களின் மீது நடத்திய  நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் 3 இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் பலியானார்கள். ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. அதன் தாக்கம் இன்றுவரை ஜப்பானிய மக்களிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அனாலும்  இன்றும் உலகின் பல  பகுதிகளில்  போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகஸ்ட், 6,9 தேதிகளை போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்கின்ற முழக்கங்களை முன்வைத்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு போட்டிகளையும் பேரணி, மனிதச்சங்கிலி, கருத்தரங்குகள் போன்ற பல நிகழ்ச்சிகளையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் விபரம் பின்வருமாறு:

பெரியகுளம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  ஆகஸ்ட்,10 காலை 11 மணிக்கு பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா-நாகசாகி  நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர் தங்க.பாண்டியராஜன் நன்றி கூறினார். ரஹீம் சகோதரர்கள் நடுநிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

போடி: போடிநாயக்கனூர் ஒன்றியம் முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கஸ்தூரி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எம்.கலா கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் கருத்துரை வழங்கினார். பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தேனி: தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் காமுத்தாய், கலைச்செல்வி, மலைச்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கம்பம்: கம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. சி.எஸ்.ஐ. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை வகித்தார். அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு பேரணியைத் தொடங்கிவைத்தார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் வட்டாரச் செயலாளர் க.முத்துக்கண்ணன் ஒருங்கிணைத்தார்.

கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன் பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11.30 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அணு ஆயுத எதிர்ப்புக் கருத்துரை வழங்கினார். மாணவர்கள் ஹிரோஷிமா நினைவு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்கள் முருகன், கணேசன், ராஜன், அழகுசித்ரா, ஜெயலட்சுமி உள்ளிட்டு சுமார் 150 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரெஜினாள் தொடங்கிவைத்தார். 2 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், அறிவியல் இயக்க முன்னாள் செயலாளர் க.மா.சிவாஜி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிச் செயலாளர் ஜி.இரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஒருங்கிணைத்தார்.

மனிதச் சங்கிலி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் நகரில் இன்று மாலை 3 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்பு மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா நடுநிலைப்பள்ளி, ஸ்ரீமுத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 700பேர் கலந்துகொண்டனர். காந்திசிலை முதல் அரசமரம் வரை மாணவர்கள் சாலையின் இருபுறமும் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். அறிவியல் ஆக்கத்திற்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் சுயசார்புக்கே, அழிவிற்கல்ல அழிவிற்கல்ல அணுவின் சக்தி அழிவிற்கல்ல, நிலவட்டும் நிலவட்டும் அமைதி எங்கும் நிலவட்டும், பரவட்டும் பரவட்டும் சமாதானம் பரவட்டும் என்கின்ற முழக்கங்களை உரத்தகுரலில் எழுப்பினர். பள்ளித்தலைமை ஆசிரியர் கணேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.இளங்கோவன், வி.வெங்கட்ராமன், கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார், கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கம்பம் கிளைப்பொறுப்பாளர்கள் சி.பிரபாகரன், பாண்டி, அய்யப்பன் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்களும் 15க்கும் மேற்பட்ட ஆசிரிய நண்பர்களும் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI



--

No comments:

Post a Comment