முதல் பக்கம்

Aug 23, 2012

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா? ஏலம் போட வேண்டுமா?

ஏலக்காய் டீ!..இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ஆர்டர் பறக்கும். ஒனக்கு வேற வேலையே இல்லடா என்று சொல்லிக்கொண்டே அந்த அருமைத் தமக்கை தம்பிக்கு, சொன்ன வாய் மூடுமுன்னே, அவனுக்குப் பிடித்த ஏலம் கமகமக்கும் டீத்தண்ணி யுடன் நிற்பார். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்கள ? அட அட எப்படி இருக்கும்கிர்றிங்க ,. சூப்பர்பா !ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! இதெல்லாம் நெசந்தான். ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..! அதுவும் சாப்பிட்டு முடித்ததும் ரெண்டு ஏல விதையை வாயில் போட்டு மென்று பாருங்களேன் அட..அட அந்த ஆனந்தமே தனிதான்.

மணங்களின் .. ராணி..!

ஏல விதைக்குஅதன் சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியம் / சொர்க்கத்தின் வாசனைப்பொருள் " என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. ரொம்ப பொருத்தமான பெயர்தான். ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. ஏலத்தின் மணத்தை மிஞ்ச,இந்த உலகில் வேறு மணமே கிடையாது நண்பா !. அதனால்தான் அனைத்து இனிப்பு வகை உணவிலும், ஏலம் கலக்கப்படுகிறது. ஒரு பொருளில் ஏலத்தைக் கலந்தாலே அதன் வாசனையே அப்படியே அலாக்காக ஆளைத் தூக்கிவிடும். பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது வாசனை ராணியான ஏலக்காய்தான். விலைதான் குங்கும்ப்பூவை விட குறைவே தவிர மணத்தில் குங்குமப்பூவை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஏலம்.


பழம் பெருமை பேசும் ஏலம்.!


உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள்களில் ஒன்று ஏலம். இதன் வயதைக் கேட்டால் மயக்கம் போட்டுவிடுவோம்.. வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால்,இதன் சரித்திரம் சுமார் 5,000௦௦௦ ஆண்டுகளைக் கடந்தது..ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. அன்று இருந்த ஏராளமான் வாசனைப் பொருட்களில், வாசனையுடன் மருத்துவ குணத்திலும், சமையல் பயன்பாட்டிலும், உடலுக்குப் பயன்படுத்தும் நறுமண தைலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பும் மரியாதையும் அதிகமோ அதிகம்தான். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய சரித்திரத்தில், அதன் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் ஏலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது எப்பர்ஸ் பாப்பிரசில் (Ebers Papyrus) குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் எகிப்தியர்களின் மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம். எகிப்திய பதிவுகளில் பழமையானதும், முக்கியமான மருத்துவக் குறிப்புகள் அடங்கியுள்ளதும் இதுதான். ஏற்கனவே சுமார் 5000 ஆண்டுகுகளுக்கு முற்பட்ட தகவல்களை எடுத்து மீண்டும் இந்த பாப்பிரஸ் பட்டையில் ஹீராடிக் எழுத்தில் எழுதியுள்ளார்கள் , இந்த பாப்பிரஸ் சுருள் 110 பக்கங்கள் கொண்டது. 20 மீட்டர் நீளம் உள்ளது.இதில் சுமார் 700 அற்புதமான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைக்கப் பட்டுள்ளன. ஏலத்தை அன்று எகிப்தியர்கள் நறுமணப் பொருளாக பயன்படுத்தியதுடன், உடல் வலி போக்கும் மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகவும்,, மதரீதியான சடங்குகளுக்கும் ஏலத்தை அதிகம் பயன் படுத்தினர்.

நாட்டுக்குள் வந்த காட்டு ராணி ஏலம்..!

ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். மத்திய தரைக் கடல் வழியே பயணம் செய்த வணிகர்கள், மணம் மிகுந்த மனதைக் கொள்ளையிடும் ஏலத்தை கான்ஸ்டாண்டி நோபிளிருந்து ஸ்காண்டிநேவியாவுக்கு கொண்டு வந்தனர். இன்றும் கூட அங்கு இதன் பெருமை குன்றாமல் இருக்கிறது. இன்றும் கூட இங்கு பாஸ்திரி, கறி உருண்டை மற்றும் ஒயினில் மணமிக்க ஏலத்தை கலக்கின்றனர்.அனைத்துப் பொருள்களிளும் ஏலக் கலப்புதான். அங்கே ஏலத்தை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாயின் துர்நாற்றம் போக்கவும், பல்லின் வெண்மைக்கும் இன்றும் ஏலம் பயன்படுகிறது.கிரேக்கர்களும், ரோமானியர்களும் அன்று ஏலத்தை நறுமணத் தைலங்களிலும், களிம்புகளிலும்,வாசனை எண்ணெய்களிலும்,பயன்படுத்தினர். ரோமானியர்கள் மேலும் இதனை உடலின் மணப்பொருள் தயாரிக்கும்போதும், வாயின் கெட்ட வாசனை போகவும், அதைவிட முக்கியமாக, உடலுறவைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.


இந்தியாவின் ஏலம்.!


ஏலம் கடந்த 2000 ஆண்டுகளாக, இந்திய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் கூட இதனை பற்றி இந்திய வரலாற்றில் பதிவு உள்ளது. கி.மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, ஏலத்தை இந்தியர்கள் சமையல், வாசனைப் பொருள் மற்றும் மருத்துவத்தில் பயன் படுத்தினர் என்ற குறிப்பு காணப்படுகிறது.இந்தியாவில் 11 ம் நூற்றாண்டிலிருந்து எல்லம் நடமாடுகிறத். அப்பொது பஞ்சமுக தாம்பூலத்தில், எலக்காயின்பட்டியல் உள்ளது.ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமை வளம் கொழிக்கும் மழைக்காடுகள் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது.ஏலம் இந்தியாவிலும், மலேசியாவிலும் அக்டோபர் மாதம் ஏலம் அறுவடை செய்யப்படுகிறது.பின்னர் அந்த காய் முழுவதையும் சூரிய ஒளியில் வைத்தே வெயிலில் காயப்போட்டு உலர்த் துவார். அதன் நிறத்துக்கு ஏற்றாப்போல தெரிவு செய்யப்பட்டு அதன் மணம் அறிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பச்சை ஏலம். அடுத்து கருப்பு ஏலம். அவை பச்சை நிறத்தில இருந்து கருஞ்சிவப்பு /வெள்ளை கூட இருக்கிறது. ஏலத்தின் விதை பச்சை வண்ணத்திலிருந்து, மஞ்சள், சாம்பல் வரை. இருக்கும்


ஏலத்தின் மணம் முழுவதும், ஏல விதைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடைத்து பொடி செய்துவிட்டால் மணம் காலப்போக்கில் குறைந்து போகும். ஏலத்தின் அருமையான மணம் மனித மனங்களை,சுண்டி இழுக்கிறது.ஏலத்தை உலர்த்திய பிறகுதான் முழு மணமும் கிடைக்கிறது. ,தென்னிந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஏலம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அது இன்று இலங்கை, கவுதமாலா ,இந்தோ-சீன மற்றும் டான்செனியா விலும் பயிரிடப்படுகிறது . இந்தியாவில்தான் ஏராளமான ஏலம் விளைந்தாலும், இங்கிருந்து குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் தனக்கு மிஞ்சி தானே தான தர்மம். அதன் விளைவுதான். நாமே எல்லாவற்றையும் பயன்படுத்திவிடுகிறோம். உலகிலேயே அதிகம் ஏலம் ஏற்றுமதி செய்யும் நாடு கவுதமாலாதான்.ஆனால் இங்கே சுமார் 100 ஆண்டுக்கு முன்னர்தான் ஏலம் அறிமுகமாயிற்று.


பெயர் சூடும் சூடாமணி..!


ஏலத்திற்கு கார்டமன் (Cardamon)என்ற பெயர் பெர்சிய விலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த புதிய பெயரான ஏலேட்டரிய என்பது தெற்காசிய நாவிலிருந்து பிறந்திருக்க வேண்டும். இந்தி, பஞ்சாபி யிலும் இது எலாச்சிதான்.இதன் பொருள் பச்சை ஏலம் என்பதே. ஆனால் சில மொழிகளில்கருப்பு ஏலம் என்றும் போருல்படியாகவும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதனை ஏலா/எல்லாகா என்கின்றனர். எல்லாம் திராவிடிய மொழியிலிருந்து வந்துள்ளது. ஆனால் ஏலம் என்பது முடிவாக தமிழ் எல்லை என்பத தெரிகிறது. தமிழ் மலையாளம், கன்னடம், இது ஏலக்காய் தான் தெலுங்கில் மட்டும் இதன் பெயர் ஏலகுலு .


வேதத்திலும்..கிரேக்கத்திலும்.. ஏலம்.!.

ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.


ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!

போருக்கு வந்து நாட்டைக் கையகப்படுத்த வந்த மாவீரன் அலெக்சாண்டரின் போர்வீரர்கள், இங்கு இந்தியாவில் தங்கி இருந்தபோது இலக்காயால் ஈர்க்கப்பட்டனர். அதன் மணத்தில் மயங்கிய போர் வீரர்கள், மறக்காம ல் , தங்கள் ஊருக்குத் திரும்புமோது, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனாராம். அப்படிப்பட்ட பெருமை உடையது ஏலம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான செய்தி ! கி.மு. 27 ம ஆண்டுகளில் வாழ்ந்த ,கிரேக்க சாம்ராஜ்யத்தின் உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏல மணத்தின் மீது கொள்ளைப் பிரியமாம். கிளியோபாட்ரா தான் குளிக்கும் நீரில் ஏலத்தை அரைத்து கலக்கச் சொல்லியே குளிப்பாராம். . அதன் வாசனையில் அவள் கிறங்கிப் போவாராம். அது மட்டுமா ? தன் காதலன் மார்க் ஆண்டனியின் வருகையை எதிர்பார்க்கும்போதேல்லாம், தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம். எப்போதும் அவரை சுற்றி ஏலத்தின் மணம் கமழுமாம்.


பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.

இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது.இருந்தாலும் கூட, ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதியானது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் தரும்படியான கிரேக்க வார்த்தையில் "அமோமன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல கொண்டுதான பேரரசர்களைச் சந்திக்க வேண்டுமாம். அரசர்கள் முன் இவர்கள் வாய் நாற்றத்துடன் பேசிவிடக்கூடாதல்லவா? அதான். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களான பேரரசர்கள் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்தபந்தவான படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.


நாங்க..இஞ்சி..குடும்பம்தாங்க..!


இப்படி பார் புகழும் ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்

அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!

ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர்.அரேபியர்கள் காபியில் எலாம் கலந்து தருவதை உபசரிப்பின் உச்சபட்ச மரியாதை என்று நினைக்கின்றனர் . அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் கலந்து அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் போது அரிசியுடன் ஏல அரிசியும் கலந்து போட்டே சமைக்கின்றனர். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்றுதான். . புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன்,உப்புமா என அனைத்துப் பொருளகளிலும் மற்றும் பிற இனிப்புகளில்மும் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்! எதியோபியாவிலும் இதே கதைதான். அவர்களும் விதம் விதமாக ஏலத்தை காபியில் கலந்து பரிமாறுவார்கள்.மத்திய ஆசியாவிலும், உஸ்ப்கிச்தானிலும் அரிசி, கறி மற்றும் இனிப்பில் என அனைத்துப் பொருள்களிலும் சும்மா சகட்டு மேனிக்கு கலந்து உண்கின்றனர் . உலகில் அதிக அளவில் ஏலம் பயபடுத்துவதில் முதல் பரிசுதான் அரேபியாவுக்கு.

மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!

ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம், ஏலம் இருமலை சரி செய்யும் மருந்தாகவும், உணவு தூண்டுவதாகவும், உடலின் சூட்டைத் தக்கவைக்கவும், எதிர் உயிரியாகவும், எதிர் பூஞ்சைக்காலன் பொருளாகவும், , டானிக்காகவும்,வயிற்றை சரிச்ய்யும் மருந்தாகவும், உடல்வலியைக் குறைக்கும் மருந்தாகவும் இருக்கிறது. 100 கிராம் ஏலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் :மேலும் வயிற்றுப் போக்கு மலமிளக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் கொண்டது இது. வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இதனைக் கட்டாயம் வா உன்ன வேண்டும். நெஞ்சு சளிக்கும் இது நல்லது. பொதுவாக கருவுற்ற பெண்கள் இதனை உண்ணக்கூடாது.

See the table below for in depth analysis of nutrients:


Cardamom, Nutritional value per 100 g.(Source: USDA National Nutrient data base) PrincipleNutrient ValuePercentage of RDAEnergy 311 Kcal 15.5% Carbohydrates 68.47 g 52.5% Protein 10.76 g 19% Total Fat 6.7 g 23% Cholesterol 0 mg 0% Dietary Fiber 28 g 70% VitaminsNiacin 1.102 mg 7% Pyridoxine 0.230 mg 18% Riboflavin 0.182 mg 14% Thiamin 0.198 mg 16.5% Vitamin A 0 IU 0% Vitamin C 21 mg 35% ElectrolytesSodium 18 mg 1% Potassium 1119 mg 24% MineralsCalcium 383 mg 38% Copper 0.383 mg 42.5% Iron 13.97 mg 175% Magnesium 229 mg 57% Manganese 28 mg 1217% Phosphorus 178 mg 25% Zinc 7.47 mg 68%


Cardamom Tea Recipe

Ingredients: (makes 2 cups)

2 cups water8-10 green cardamom pods2 green tea bags (optional)1 tbsp grated orange rind (or fresh orange juice)Honey or agave nectar (optional)

tbsp = tablespoon

Directions:

Add the water to a saucepan and bring to the boil, then reduce to a simmer. Crack open the green pods and add to the saucepan and simmer for 2-3 minutes. The seeds will dissolve in their pods.

Turn off the heat and, if using, add the teabags and the orange rind (or juice) and let steep for 5-10 minutes.

Remove the teabags and pods, and, if you like a bit of sweetness, add the honey or agave and serve.

Honey and Cardamom Ice Cream

The following recipe is from Food Fit for Pharaohs by Michelle Berriedale-Johnson

2 cups whole milk

1 level teaspoon arrowroot

2/3 cup double or heavy whipping cream

10 cardamom pods bruised with a rolling pin

2 tablespoons honey

1 tablespoons orange flower water

½ tsp crushed mastic (if available)

Mix a little of the milk into the arrowroot to make a smooth cream.

Add this to the rest of the milk and the cream. Transfer to a saucepan with the cardamom and honey and bring slowly to a boil. Cook very gently, stirring continuously until mixture thickens slightly. Add orange flower water and crushed mastic (if using) and continue to cook a few more minutes. Remove from heat, cover and allow to cool completely.

When quite cold, put into an ice-cream maker and churn-freeze until frozen, but not frozen hard. Serve at once if possible. If not, freeze hard, but before serving remove from the freezer and allow to soften in the fridge at least 30 minutes. Serve with fresh fruit or a macerated fruit salad.

How to make cardamom chai tea
?

Serves: 4

  • Cardamom chai tea ingredients
  • 2 teaspoon of loose black tea leaves
  •  3 pods of green cardamom
  • 1’’ piece of ginger
  • 2 cups of milk
  • 3 cups of water
  • A pinch of cinnamon powder (optional)
  • A pinch of freshly ground cardamom powder
  • Sugar to taste.
  • Method:
  • Put the seeds from the green cardamoms in a mortar and pound it with a pestle to turn it into fine powder
  • Clean and peel the ginger, cut it into thin slices and crush it in a mortar separately.
  • Boil the water in a medium sized pan along with the freshly crushed spices for few minutes.
  • Turn off the flame, cover it with a lid and let the spices infuse their flavour into the boiled water.
  • Now add the milk, sugar and tea leaves to it, bring it to boil 2-3 times but don’t let the mixture boil over.
  • Turn down the heat and let the blend simmer for 5 minutes.
  • Remove from heat and strain it into serving cups.
  • Sprinkle a pinch of cardamom powder and cinnamon powder (if available) and serve piping hot.
  • note: You can also turn this simple recipe into a latte. All you have to do is top your chai with milk directly from the espresso machine instead of boiling it with the tea leaves. This will confer a delicious frothy quality to your chai. This chai can also be relished cold. Add a sumptuous scoop of vanilla ice cream to your chilled elaichi chai tea instead of milk or top it up with a swirl of whipped cream to transform this spicy tea into a pleasant summer drink.


தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.


கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். இது எப்படி இருக்கு நண்பா! இன்று அதனை தங்கம் விற்கும் நிலையில் நினைத்துக் கூடப்பர்ர்க்க முடியுமா? 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம் முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. பிற நாட்டு முதலாளிகள் எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?
-PROF.S.MOHANA






















No comments:

Post a Comment