முதல் பக்கம்

Aug 21, 2012

நாகையில் துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி


First Published : 19 Aug 2012 01:34:35 PM IST

நாகப்பட்டினம், ஆக. 18: தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

அறிவியல் இயக்க பொதுச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைச் செயலர் ஆவராணி ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) மீனா, அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் இரா. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் தேர்ச்சி பெற்ற 65 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

துளிர் அறிவியல் போட்டியில் வென்ற பள்ளிகள்: 6, 7, 8 வகுப்பு: புஷ்பவனம் உதவிபெறும் பள்ளி, குத்தாலம் கணபதி தேசியப்பள்ளி, ஓரடியம்பலம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி. 9,10-ம் வகுப்பு: வலிவலம் தேசிகர் பள்ளி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பள்ளி,புறாகிராமம் அரசுப்பள்ளி. 11, 12-ம் வகுப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபள்ளி, வலிவலம் தேசிகர் பள்ளி, ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப்பள்ளி.

ஜந்தர் மந்தர் வினாடி வினா:6, 7, 8-ம் வகுப்பு: சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, நாகை நகராட்சி மகளிர் பள்ளி. 9,10-ம் வகுப்பு: நாகை நகராட்சி மகளிர் பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, நாகை தூய அந்தோனியார் பள்ளி. 11, 12-ம் வகுப்பு: நாகை தேசிய பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி.

போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி சுழற்கேடயங்களை வழங்கினார்.பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன், நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமலிங்கம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கீழ்வேளூர் உதவி தொடக்கக் கல்வி அலுவர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment