ஆகஸ்ட் 14,2012,00:12
பல்லடம் : பல்லடத்தில் நடந்த துளிர் வினாடி-வினா போட்டியில், மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து சுவாமி விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பல்லடம் ஒன்றிய அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி-வினா போட்டி நடந்தது.
30 பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்று பிரிவுகளிலும், பல்லடம் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீரஞ்சனா, பிளெஸ்ஸி மோனிசா, அண்ணாமலை, விக்னேஷ், அனீஸ் கார்த்திக், மோகன் சுந்தர், கவிபிரியன், நர்மதா, இந்துபிரியா ஆகியோரை தாளாளர் முத்துக்குமார், பள்ளி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
நன்றி: தினமலர்

No comments:
Post a Comment