முதல் பக்கம்

Oct 28, 2011

6வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2011 /தமிழகத்திலிருந்து 27 ஆசிரியர்கள் தேர்வு

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவற்றோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அளவில் நடத்தக்கூடிய,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வே தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு. கடந்த 2003 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் இம்மாநாடு அறிவிக்கப்படும். இந்த ஆண்டிற்கான பொதுத்தலைப்பாக அறிவியல் கல்வியின் போக்கும் புதிய சவால்களும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவியல் பாடம் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதுமைகள், அறிவியல் பாடங்களுக்கு இடையிலான உட்தொடர்பு,வேதியியலும் தரமான வாழ்க்கையும் ஆகியன துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இம்மாநாட்டில் அதிக அளவிலான ஆசிரியர்களைப் பங்கேற்க வைக்கும்பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (தென்மண்டலத்தில் தேனி,மதுரை ஆகிய இடங்களில்)பயிற்சி முகாம்களும், கலந்துரையாடல் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதன்விளைவாக தமிழகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் ஆசிரியர்களால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் நேபாளம்,வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும்கூட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்மாநாடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதையும் அறியலாம். இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ந்தேதி மாநாட்டிற்கு தேர்வான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக தேர்வான ஆய்வறிக்கைகள் விபரம்: அந்தமான்,நிக்கோபார், மேகாலயா, காஷ்மீர், மிசோரம் தலா-1, இமாச்சல்-2, அசாம்-3, குஜராத்-3, சதீஸ்கர்-4, கர்நாடகா, பஞ்சாப் தலா-5, கேரளா-6, ஜார்கண்ட்-7, ம.பி, சண்டிகர்-8, இராஜஸ்தான்-9, மேற்கு வங்காளம்-10, டெல்லி, கோவா-11, பிகார்-13, பாண்டிச்சேரி-14, உ.பி-16, உத்தரகாண்ட்-19, ஹரியானா-19, மஹாராஷ்டிரா-22, தமிழகம்-27, ஆந்திரா-52, ஒரிசா-67,நேபாளம்-1, வங்கதேசம்-1.
 
தமிழகத்திலிருந்து தேர்வான ஆசிரியர்கள் விபரம்:
S. No. TITLE OF PAPER Sub-Theme Oral/Poster [O/P] STATE AUTHORS/ADDRESSES
XXIV.



1 Biotechnology For Rust Free Iron Metal surface III O Tamil Nadu Dr. S. Rajendran, Unit. Of Rural Biotechnology, Deptt. Of Botany, Saraswathi Narayanan College, Madurai, Tamilnadu, Pin- 625022
2 Application of Remote Sensing Data in Land use and Land Cover Studies II O Tamil Nadu Dr. V.Emayavaramban, Associate Professor, Deptt. Of Geography, School of Earth and Atmospheric Sciences, Madurai Kamaraj University, Madurai, Tamil Nadu- 625021
3 Herbal Hair Dry III P Tamil Nadu Prof. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
4 Real Education Must Embrace Our Daily Life II O Tamil Nadu P.Rajan, Abraham James Memorial Matric School, Gnaram Vilai, Pacode Post, Kanya Kumari Distt., Tamilnadu, Pin- 629168
6 Effect of Yogasanas on Reducing Obesity in School Children II O Tamil Nadu V.Ganesan, Principal, Satchidananda Jothi Nikethan, Matric Higher Secondery School, Kallar, Mettupalayam, Coimbatore, TamilNadu, 641 305
9 Utilising the Natural Resources to Remove Metal Ions in Waste Water I P Tamil Nadu Mr.S.Elamaran, Pappunaykkanpatti, Peraiyur Taluk, Madurai District, Tamil Nadu, Pin- 625 708
11 Science Education Activity I P Tamil Nadu Mr. M. Pandiarajan, Teacher, 10C, RMC Colony 2nd Street, Muthupatti, Madurai, Tamilnadu, Pin-625003
12 Household Chemical - Body Care Products III O Tamil Nadu Prof. Dr. Elavalagan. V.A., 209, Pushpam Colony, Arulananda Nagar, Thanjavur, Tamil Nadu, Pin- 613007
13 Food Processing and Preservation III O Tamil Nadu Mr. T. J. Nagendran, Murugappa Nagar, Third Cross Street, Tiruttani, Tiruvallur District, Tamil Nadu, Pin- 631 209
14 Chemical Science and Quality of Life. III O Tamil Nadu K. Mahamudha, W/o, M.Abubacker Siddia, 6-2-48, Nagalapuram, (Near R.J. Office) Batlagundu, Dindugal (D.T.) Tamilnadu,
15 Geography as an interdisciplinary and correlating science II P Tamil Nadu G. Thirumoorthy, Asst. Prof., Vinaya Mission's College of Education, Kirumampakkam, Puducherry, Tamilnadu,Pin-607402
17 Effluent - A Remedial Measure III P Tamil Nadu J.Sheela Grace, Sachidhanandha Jothi Nikethan, Kallar, Mettupalayam, Coimbatore, Tamil nadu- 641305
18 Innovation techniques in teaching - learning of physics I O Tamil Nadu Senthilkannan K, Astt. Prof.& Head Incharge, Dept. of Physics, School of Engineering, Vels University, Pallavaram, Chennai, State: Tamil Nadu
19 4 Steps of enhance learning outcomes I O Tamil Nadu Rachna Lakshminarayanan, C-6, Green Gardens, Nabard Officers Quarters, No.-8 Cenotaph Road, Teynampet, Chennai, Tamil Nadu, 600018
20 Effectiveness of software package to write tamil lesson plan for B.Ed. Students- Teachers I P Tamil Nadu Dr. S. K. Panneer Selvam, Asst. Prof. Dept. of Education, Bharathidasan University, Trichy, Tamil Nadu.
21 Challenges in imparting science education to the differently abled I O Tamil Nadu Dr. P. Iyamperumal, Executive Director, Tamilnadu Science and Technology Center, Gandhimandapm Road, Chennai, Tamil Nadu,-600025
22 Hygiene, Heath and Environment Science. III P Tamil Nadu S.Murugesan, Tamil Nadu Science Forum, E 9/24, TNHB, Bagalpur Hutco, Hosur, Krishnagiri Dt., Tamilnadu, Pin-635109
23 Carbon Capture Using Genetically Engineered Bacteria III P Tamil Nadu Dr. V. Sukumaran, Dept. of Biotechnology, Periyar Maniammai University, Thanjavur, Tamil Nadu, Pin-613403
24 Green Chemistry in generating minimum waste and utlising minimum energy III O Tamil Nadu Dr. T. Senthilnathan, Professor, Dept. of Phisics, Velammal Engineering College, Chennai, Tamil Nadu, Pin-600066
25 Effectiveness of cooperative learning in biology for standard XI students I O Tamil Nadu Dr. R. Annakodi, Associate Professor, Dept. of Education Avinashilingan Instt. For Home Sciuence and Higher Education, Varpalauam, Thadagam-P.O.. Coimbatore-108, TamilNadu
26 Study of Science Experiments prescribed in Tamil Nadu State Science Text Book. I O Tamil Nadu M. Pandiarajan, Teacher, Champak Nurcery and Primary School, Muthuppatti, Madirai, Tamil Nadu, Pi-625003
27 Monitoring and Measurement Opportunities of Food Contaminants Through Process Approach III O Tamil Nadu Prof. Dr. Vijayan Gurumurthy Iyer, Principal, Prince Dr. K. Vasudevan College of Engineering & Technology, 9 B, Block-II, Rathna Nagar Road, Virugambakkam, Chennai-92, Tamil Nadu

தேர்வான ஆசிரியர்களுக்கு நவம்பர்,8ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்வான ஆய்வுக்கட்டுரைகள் தேசிய அளவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது. போக்குவரத்து, தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் பணிமேல் அனுமதியுடன் கல்ந்துகொள்ளலாம். தமிழகத்திலிருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

அறிவியல் வணக்கங்களுடன்...
தே.சுந்தர்,தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்,
ஆசிரியர் இணையம்&ஆசிரியர் அறிவியல் மாநாடு

Oct 27, 2011

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-3,பெரியகுளம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் வட்டாரக்கிளையின் சார்பில் 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அக்டோபர்,22 அன்று பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பெரியகுளம் கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர் தலைமை வகித்தார். கிளைச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். கிளைப்பொறுப்பாளர் எ.எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன் மற்றும் கல்வி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மையநோக்கம், ஆய்வு மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்துரை வழங்கினர். பாரதி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். பெரியகுளம் பகுதியில் இருந்து பத்து பள்ளிகளைச் சேர்ந்த இருபது ஆசிரியர்கள் மற்றும் எழுபது மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-3, பெரியகுளம்

அன்புடையீர், வணக்கம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிக்குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி பயிற்சிகள், குழந்தைகள் அறிவியல் திருவிழா,மெட்ரிக் மேளா, துளிர்-ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடிவினா, துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்,பல்வேறு அறிவியல் அறிஞர்களின் பெயரில் துளிர் இல்லங்கள் என ஆண்டு முழுவதும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதேபோல, மத்திய அரசின் குழந்தை விஞ்ஞானியர் விருதுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில்,மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறும். இம்மாநாட்டில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், ஆய்வு செய்யும் உத்திகள், சமர்ப்பிக்கும் நெறிமுறை, தலைப்பைத் தெரிவுசெய்யும் முறை ஆகியவற்றை விளக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் சார்பில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநில,மாவட்டக் கருத்தாளர்கள் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளனர்.

எனவே தங்கள் பள்ளியில் இருந்து அறிவியல் ஆசிரியர் அல்லது அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் மற்றும் அறிவியலில் ஆர்வமுடைய 10 குழந்தைகளை அவசியம் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பயிற்சி விபரம்

Ø அக்டோபர்,22 சனிக்கிழமை காலை 10 மணி-12.30 மணி

Ø டிரையம்ப் மெட்ரிக் பள்ளி,பெரியகுளம்

மேலும் விபரங்களுக்கு..

எ.எஸ்.பாலசுப்ரமணியன்,கிளைத்தலைவர்,த.அ.இ._9994845246 எஸ்.இராம்சங்கர்,கிளைச்செயலாளர்,த.அ.இ._9952511460 பெ.ஆண்டவர்,கிளைப்பொருளாளர்த.அ.இ._9952881704

மாநில அளவிலான துளிர்/ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி-வினா-2011


அன்புடையீர், வணக்கம். கடந்த செப்டம்பர் 7,2011 அன்று கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. தங்கள் பள்ளியில் இருந்தும் மாணவர்களைக் கலந்து கொள்ளச்செய்தமைக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்துநாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். .அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகின்ற அக்டோபர் 30ம்தேதி மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகள் கரூரில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப்பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழ்வழி பயிலும் மாணவர்கள் துளிர் பிரிவிலும் மெட்ரிக் மாணவர்கள் ஜந்தர்மந்தர் பிரிவிலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடைபெறும் இடம் & இதர தகவல்கள்:

1. பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி, பரணி பார்க் வளாகம்,கரூர்.
2. இயற்பியல், வேதியியல், உயிரியல், துளிர், பொது அறிவு, காட்சிப்படுத்துதல், கணிதம், புதிர், சோதனை செய்முறை, இயற்கை கண்டறிதல், தொட்டுணர்ந்து தெரிவித்தல் போன்ற சுற்றுக்களில் கேள்விகள் இடம்பெறும்.
3. காலை 8.30 மணி முதல் பதிவு நடைபெறும்
4. கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5. அனைவரும் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
6. இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கு அறிவியல் இயக்கம் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் வருகை தரவும்.
7. பள்ளியில் இருந்து கடிதம் அவசியம் பெற்று வரவும்.
8. உங்களின் பயணத்திட்டம்,பங்கேற்பு குறித்து மாவட்டச் செயலாளருக்கு மறவாது தெரியப்படுத்தவும்.

தங்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலும் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

மாவட்டச்செயற்குழு


நண்பர்களே..
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழுக் கூட்டம் கடந்த அக்டோபர்,14,2011 அன்று பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திறனறிதல் போட்டிகள், தேசிய புத்தக வாரம் ஆகியவற்றை முன்வைத்து மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் பேசினார்.மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார். விவாதித்த்தில் இருந்து..


1. மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நவம்பர் முதல் வாரம் பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் நடத்துவது.
2. நிதி திரட்டுவதில், ஒருங்கிணைப்பதில் அனைத்துக்கிளை நண்பர்களும் தேவையின் அடிப்படையில் உதவுவது.
3. அனைத்து மாவட்டச் செயற்குழு,நிர்வாகக்குழு நண்பர்களும் குறைந்தபட்சம் ரூ.200 முதல் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மனமுவந்து நன்கொடை வழங்குவது. (நண்பர்.மணிகண்டன் கூட்டத்தின்போதே ரூ.200 வழங்கித் துவங்கி வைத்திருக்கிறார்.
4. அதுபோல குழந்தைகள் அறிவியல் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கிவரும் முனைவர் எஸ்.கண்ணன்,முனைவர் ஜி.செல்வராஜ் மற்றும் முனைவர்.சி.கோபி ஆகியோர் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் மாநாட்டிற்கான நடுவர் குழுவை ஒருங்கிணைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5. அக்டோபர் 22 அன்று பெரியகுளத்தில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம் நடத்துவது.
6. திறனறிதல் போட்டிக்கு மாணவர்களைச் சேர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரக்கிளையும் தங்கள் பகுதியில் குறைந்தபட்சம் 3 பள்ளிகளைச் சந்திப்பது.  [பதிவுக்கான இறுதி நாள்: அக்டோபர் 28] கிளைச்செயலாளர்கள் சற்றும் தயங்காமல் தங்கள் பகுதியிலுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்கள்!
7. நவம்பரில் தேசிய புத்தகவாரத்தைக் கொண்டாடும்பொருட்டு புத்தகக்கண்காட்சிகளுக்கும், புத்தக அறிமுக விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கிளைகள் திட்டமிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
8. அடுத்த மாவட்டச்செயற்குழு கூட்டத்தை நடத்தவிரும்பும் கிளைப்பொறுப்பாளர்கள் மாவட்டச்செயலாளரைத் தொடர்புகொள்ளவும்..

தே.சுந்தர்,மாவட்டச்செயலாளர்