முதல் பக்கம்

Oct 12, 2011

ஹரிஷ் சந்திரா..இந்திய கணிதவியல் விஞ்ஞானி..!

  
அன்பு நண்பர்களே.. நம்மில் பெரும்பாலோருக்கு கணிதம் என்றால் வேப்பங்காயாகவே கசக்கும்.கணிதத்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல்கள் & வகுத்தலை நினைத்தாலே, நிறைய பேருக்குகுமட்டிக்கொண்டு வாந்தி வந்துவிடும். அதுவும், தசம எண்களின் கழித்தல் என்றால் குலை நடுங்கும். கணிதத்தை எண்ணி,கணக்கு பரிட்சை வந்துவிட்டால் அந்த பயத்தில் அவர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும். இந்த பூமியிலேயே நிதர்சமாய் நரகத்தைச் சந்திப்பதாய் வேதனைப் படுவார்கள். இது பொய்யல்ல உண்மைதான்.ஆனால் நிங்கள் பணத்தை எண்ணும்போது மட்டும் பரம சந்தோஷத்துடன் செயல் படுவீகள். அப்படிப்பட்ட உங்களுக்கு, கணிதத்தின் அஞ்ஞானிகளுக்கு, ஒரு கணித விஞ்ஞானி, ஒரு கானல் நீராய்த்தான் இருப்பார்கள்.
 
  ஹரிஷ் சந்திரரும் அப்படிப்பட்ட மக்களுள் ஒருவராய்த்தான் துவக்கத்தில் இருந்தார். பின்னர்தான் அவர் அடிக்கடி தடம் மாற்றும் நபர்களுள் ஒருவராக, தனது தடத்தை மாற்றிப் போட்டு தன் விதியை தானே நிர்ணயித்தார். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கணித விஞ்ஞானி ஹரிஷ் சந்திரா.   ஹரீஷ் சந்திரா எனப்பாடும் ஹரீஷ் சந்திர மெஜ்ரோத்ரா  கான்பூரில் 1923 , அக்டோபர்  திங்கள் 11  ம்    நாள் பிறந்தார். ( Harish Chandra Mehrotra; 11 October 1923 – 16 October 1983). இவரது தாயின் பெயர் சத்யகதி செத்ஜ்(Satyagati Seth). தந்தை சந்திர கிஷோர் (Chandrakishore ). தனது பள்ளிபடிப்பை குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியிலும், கல்லூரி வாழ்க்கையை அலஹாபாத் பல்கலையில் கொள்கையியல்  இயற்பியல் படித்தார் .   நன்றாகவே வாழ்க்கை அனுபவித்தார். தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், மேற்படிப்புக்காக பெங்களூரு வந்தார்.பின்னர் 1945 ல் கேம்பிரிட்ஜ் பலகலையில் பால்டிராஜ்ஜின் கிழே ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்தார். அப்போது அங்கே, ஓல்ப்கேன்க்  பாலி என்பரின் உரைகக ளை க் கேட்கலானார். பின்னர் இருவரும் நண்பராகினர். இந்த கால கட்டத்தில்தான், ஹரிஷுக்கு  கணிதத்தில்  அதீத ஆர்வம் ஏற்பட்டது.பின்னர்  ஆராய்ச்சி செய்வதற்காக 1947 ல் அமெரிக்கா செல்கிறார்.
     
 அதன் பின் இந்தியாவுக்கு அவ்வப்போது வந்தார். தனக்கு  அதீத மான  6 வது அறிவு  இல்லை  என  எண்ணினார் . அதுதான்  இயற்பியலில்  வெற்றி  பெற  கட்டாயத்  தேவை என்றும்  நினைத்தார்.
20 ம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித விஞ்ஞானிஹரிஷ் சந்திராதான். . அவர் representation கொள்கையிலும்(representation theory ), முக்கியமான, harmonic analysis லும், ஏராளமான கருத்துள்ள தகவல்களை தந்துள்ளார். அத்துடன் algebra விலும் ஏராளமான பங்களிப்புகள் செய்தார்.  
 அவர் அமெரிக்கா சென்ற பின், ஹெர்மேன் வைய்ல் மற்றும் கிளாடி செவல்லி  (Hermann Weyl and Claude Chevalley )கணிதத்தால்தூண்டப்பட்டார்.அவர் அதன்பிறகு இந்தியாவுக்குவரவில்லை. அங்கேயெ ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பிரின்ச்டன் பலகலையில் பணிபுரிந்தார். ராமானுஜத்திற்குப் பிறகு பெரிய கணித விஞ்ஞானி இவர்தான் என்று சொல்லப்படுகிறது.இவர் எண் கொள்கையில் சிறந்து விளங்கியவர். பி, ஹரிஷ் சந்திரா, தேசிய அறிவியல்  அமைப்பிலும் ( National Academy of Sciences) மற்றும் ராயல் சொசைட்டியின் (Fellow of the Royal சொசிஎட்டி) உறுப்பினராக இருந்தார் .1954 ல், அமெரிக்க கணித சமூக அமைப்பில் (American Mathematical Society,)கோல் பரிசு(Cole Prize) என்ற ஒரு பரிசு அளித்தனர். இந்திய தேசிய அறிவியல் கழகமும், ஹரீஷ் சந்திரருக்கு,பெருமையும் சிறப்புm செய்து 1974 ல்  ஸ்ரீனிவாச ராமானுஜம் பதக்கமும் அளித்தது. .ஹரிஷ் சந்திர 1983 ல் பிரின்ஸ்டனில் அக்டோபர் 16 ம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் நீத்தார்.
 

By
MOHANA

No comments:

Post a Comment