முதல் பக்கம்

Oct 10, 2011

அக்டோபர் 8,உயிரி இயற்பியல் விஞ்ஞானி ராமச்சந்திரன் பிறந்த தினம்.

அன்பின் நண்பர்களே, வணக்கம். இன்று அக்டோபர் 8 ம் நாள்  உயிரி இயற்பியலில் சாதனைகளை நிகழ்த்திய விஞ்ஞானி ராமச்சந்திரன் (Gopalasamudram Narayana Iyer Ramachandran, or G.N. Ramachandran, (8 October 1922 – 7 April 2001)) பிறந்த தினம். ராமச்சந்திரனின் முழுப் பெயர் கோபாலசமுத்திரம் நாராயண் ஐயர் ராமச்சந்திரன் என்பதே. இவர் மிகவும் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆவார். புரதத்தின் உட்கட்டமைப்பில் உள்ள பெப்டைடு அமைப்பைப் (Ramachandran plot for understanding peptide structure) புரிந்து கொள்ள ராமச்சந்திரன் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்.  நம் தோலை பளபளப்பாக   வைத்திருக்கும் கொலாஜனின்(collagen)  மூன்று சுற்றில் உள்ள மூன்றடுக்கு  ஏணிப்படி அமைப்புக்கான மாதிரியை முதன்  முதல் அமைத்தவர். மேலும் ராமச்சந்திரன் உயிரியல் மற்றும் இயற்பியலில் ஏராளமான பங்களிப்பைச் செய்தவர். 
ராமச்சந்திரன் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் (village of Moses De Khan), தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இவரது தாத்தன் பூட்டன்கள் வாழ்ந்த ஊர் நெல்லை மாவட்டத்திலுள்ள கோபால சமுத்திரம். எனவேதான் இவர் தன் பெயருடன் கோபால சமுத்திரத்தை இணைத்துக்கொண்டார். பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனத்தில்(Indian Institute of ScienceBangalore , 1942) மின்னியல் பொறியியல் படித்தார். ஆனால் இயற்பியலில் உள்ள சுவையான விஷயங்களை அறிந்துகொண்டு, உடனே இயற்பியலுக்குத் தாவினார். அதிலேயே பட்ட மேற்படிப்பும் பின்னர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர்.C .V . ராமனின் மேற்பார்வையில் , ஆய்வும்  செய்து முனைவர் பட்டம் பெற்றார்.    crystal physics crystal optics crystal growth  solid-state reactivity  X-ray diffuse scattering போன்ற துறைகளில் பங்களிப்பு செய்து, மூலக்கூறு உயிரி இயற்பியல் மற்றும் எக்ஸ் றே  படிகவியலையும்   (molecular biophysics & X-ray crystallography,  இன் peptide synthesis ஒன்றாக இணைத்து பெப்டைடு உருவாக்கம் செய்தார். 
  ராமசந்திரன்,இயற்பியலுக்காக இந்தியாவில் 1961 ல்,  சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசும்  (Shanti Swarup Bhatnagar Award ) மற்றும் இலண்டனின் ராயல் கழகத்தின் ( Royal Society ) ஆதரவுடன் பெலோஷிப் பெற்றவர். 1999 ல், சர்வதேச படிகவியல்  துறையின் சங்கம் (International Union of Crystallography)இவருக்கு எட்வால்ட்  பரிசு (Ewald Prize )தந்து, பப்டிகவியல் துறையின் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர் என  மரியாதை செய்தது. -MOHANA

No comments:

Post a Comment