முதல் பக்கம்

Oct 10, 2011

உலக சிரிப்பாளியின் தினம் (The World Smile Day)


நண்பா, இன்று அக்டோபர் 7 ம் நாள் உலக சிரிப்பாளியின் தினம்(The World Smile Day). இப்படி சிரிப்பாளியின் தினத்தைக் கொண்டாடுவதற்கான கருத்து, ஹார்வே பால் (Harvey Ball) என்பவரால் உருவாக்கப் பட்டது. அவர் ஒர் தொழில்ரீதியான கலைஞர். மாசசூசெட்டில் (Massachusetts) வாழ்பவர். நாம் அலைபேசி மற்றும் மின்னஞ்சலில் பயன்படுத்தும் மஞ்சள் வண்ண சிரிப்பாளி முகத்தை (yellow Smiley Face) 1963 ல் உருவாக்கியவரும் அவரே. ஆனால் உலக சிரிப்பாளியின் தினம் 1999 லிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 7 ம் நாள் கொணடாடப்படுகிறது


நிறைய பேருக்கு புன்னகையின் மதிப்பும் அதன் விலையும் ஆற்றலும் தெரிவதே இல்லை. ஒரு புன்னகை என்ன விலை.. உன் இதயம் எழுதும் விலை..என்பது திரைப்பட பாடல் மட்டுமல்ல.. உண்மையும் அதுதான். ஒரு புன்னகை என்பது மாய மந்திர மாயாஜாலக் கலைகள்/திறமைகள் பெற்றது. அது ஒருவரின் உணர்வுரீதியான வலியை ம்ட்டுமல்ல, நெசம்மாவே, உடல்கூறு ரீதியான வலியையும் அப்படியே தடவி, நீவிக்கொடுத்து நீக்கிவிடும். நீங்கள் ஒருவரைப் பார்த்து புன்னகை புரிந்தால், அது அவ்ர்களை பதிலுக்கு புன்னகை பூக்க மட்டும் இன்றி, அவர்கள் நீங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், பாராட்டுவதாகவும்,உளப்பூர்வமாய் அங்கீகரிப்பதாகவும் ஆதரிப்பதாகவும் உள்ள பொருளினை, அவர்களிடம், மௌன மொழியிலேயே அமைதியாய் அள்ளிக் கொடுத்துவிடுகிறது.

ஒரு எளிய சாதாரண்ப் புன்னகை எனபது ஒருவரின் பயத்தை, பாதுகாப்பற்ற தன்மையை, மன்க்காயத்தை, குழப்பத்தை அமைதியாய் போக்கும் ஒரு மந்திரக் கோல். ஒரு புன்னகை உலகத்தையே புரட்டிப் போட்டு அதனை அனைவ்ருக்கும் தொற்றச் செய்து, பங்குபோட்டுக் கொடுக்கும். புன்னகை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உடனே பசக் கென ஒட்டிக்கொள்ளும். ஒரு புன்னகையின் மூலம் ஓராயிரம் கதைகள், பயன்க,ள், மகிழ்ச்சி பரவும். என்றும் எப்போது புன்னகைப்போம்.


அன்புடன்
மோகனா <mohanatnsf@gmail.com>


No comments:

Post a Comment