நண்பர்களே..
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழுக் கூட்டம் கடந்த அக்டோபர்,14,2011 அன்று பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திறனறிதல் போட்டிகள், தேசிய புத்தக வாரம் ஆகியவற்றை முன்வைத்து மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் பேசினார்.மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார். விவாதித்த்தில் இருந்து..
1. மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நவம்பர் முதல் வாரம் பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் நடத்துவது.
2. நிதி திரட்டுவதில், ஒருங்கிணைப்பதில் அனைத்துக்கிளை நண்பர்களும் தேவையின் அடிப்படையில் உதவுவது.
3. அனைத்து மாவட்டச் செயற்குழு,நிர்வாகக்குழு நண்பர்களும் குறைந்தபட்சம் ரூ.200 முதல் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மனமுவந்து நன்கொடை வழங்குவது. (நண்பர்.மணிகண்டன் கூட்டத்தின்போதே ரூ.200 வழங்கித் துவங்கி வைத்திருக்கிறார்.
4. அதுபோல குழந்தைகள் அறிவியல் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கிவரும் முனைவர் எஸ்.கண்ணன்,முனைவர் ஜி.செல்வராஜ் மற்றும் முனைவர்.சி.கோபி ஆகியோர் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் மாநாட்டிற்கான நடுவர் குழுவை ஒருங்கிணைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5. அக்டோபர் 22 அன்று பெரியகுளத்தில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம் நடத்துவது.
6. திறனறிதல் போட்டிக்கு மாணவர்களைச் சேர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரக்கிளையும் தங்கள் பகுதியில் குறைந்தபட்சம் 3 பள்ளிகளைச் சந்திப்பது. [பதிவுக்கான இறுதி நாள்: அக்டோபர் 28] கிளைச்செயலாளர்கள் சற்றும் தயங்காமல் தங்கள் பகுதியிலுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்கள்!
7. நவம்பரில் தேசிய புத்தகவாரத்தைக் கொண்டாடும்பொருட்டு புத்தகக்கண்காட்சிகளுக்கும், புத்தக அறிமுக விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கிளைகள் திட்டமிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
8. அடுத்த மாவட்டச்செயற்குழு கூட்டத்தை நடத்தவிரும்பும் கிளைப்பொறுப்பாளர்கள் மாவட்டச்செயலாளரைத் தொடர்புகொள்ளவும்..

தே.சுந்தர்,மாவட்டச்செயலாளர்
No comments:
Post a Comment