தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக்கூட்டம் நவம்பர்,22 அன்று மாலை, தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள், எதிர்காலப் பணிகள் குறித்துப் பேசினார். மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் மாநிலத் தகவல்களைக் கூறினார்.
பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த பரிசீலனை நடைபெற்றது. அனைத்துக் கிளைச் செயலாளர்களும் (கம்பம் தவிர்த்து) தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஒருங்கிணைத்த பெரியகுளம் கிளைக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட்து.தேனி ஜெகநாதன் வேதியியல் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சிமுகாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டு துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டியில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், தேனி, சின்னமனூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 800க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர். அதற்காக உழைத்த அனைத்துக் கிளை நண்பர்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள். அதே நேரத்தில் நாம் தவறவிட்ட சில நல்ல வாய்ப்புகளால் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பதை நாமே தடுத்திருக்கிறோம்.
மதுரை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்த பள்ளி வேதியியல் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சிமுகாமில் லட்சுமிபுரம் ஜெகநாதன், இராயப்பன்பட்டி ஜஸ்டின் ரவி ஆகியோர் பங்கேற்று மிகுந்த திருப்தியுடன் திரும்பியுள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி வேதியியல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, வேதியியல் திருவிழாக்களை நடத்த கிளைகள் முயற்சி எடுக்கலாம்.
மாவட்ட அளவிலான தொண்டர்கள் பயிற்சி முகாமை டிசம்பர், 17,18 தேதிகளில் போடி வட்டாரக்கிளையின் சார்பில் நடத்திக் கொடுப்பது.
மாவட்டத்தில் இன்னும் விரிவாக அறிவியல் இயக்கப் பணிகளை எடுத்துச் செல்வதற்காக ஒரு முழுநேர ஊழியரை ஜனவரி மாதம் நியமிப்பது. அதற்கான நிதி ஏற்பாட்டிற்காக மீண்டும் திட்டமிடுவது.
மே மாதம் மாநிலச் செயற்குழுவை நடத்திக் கொடுப்பது எனவும்,இனிவரும் காலங்களில் மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கிளைச்செயலாளர்கள் கூட்டமும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டச் செயற்குழுக் கூட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார்.
அறிவியல் வணக்கங்களுடன்..
தே.சுந்தர்
மாவட்டச்செயலாளர்
மாவட்டச்செயலாளர்
No comments:
Post a Comment