முதல் பக்கம்

Dec 4, 2011

இளம் விஞ்ஞானி விருதுக்கு கூடலூர் மாணவர்கள் தேர்வு

தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2011,
 
கம்பம் : இளம் விஞ்ஞானி விருதுக்கு கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் கூறியிருப்பதாவது : நவ. 13 ல் பெரியகுளத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் 57 மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். அதில் 7 கட்டுகரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.மாநில மாநாடு சத்தியமங்கலத்தில் நடந்தது. தேசிய மாநாட்டிற்கு 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டது. தமிழ் முதுநிலை பிரிவில் கூடலூர் (என்.எஸ்.கே.பி., மேல்நிலைபள்ளி)விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சுரேந்தர், தினேஷ்குமார், பகவதிராஜ், தீபன், சுபாஷ் ஆகியோர் சமர்ப்பித்த "வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் மனிதர்களால் ஏற்படும் மாசுபாடும் அதற்கான தீர்வுகளும்' என்ற ஆய்வு தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரியர் முத்துக்கண்ணன் இருந்துள்ளார். டிச. 27ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய மாநாட்டில் இவர்களுக்கு இந்திய ஜனாதிபதி இளம் விஞ்ஞானி விருதும், நினைவுப்பரிசும் வழங்குவார்,'என்றார்

No comments:

Post a Comment