மா கரோல் ஜெமிசன்,விளாதிமிர், பால் பெர்னியா, எர்னஸ்ட் குட்பாச்டார்,ராபர்ட் ,வெர்ஸ்வொர்த்,மேக்னட் கேஸ்தாப், பால் பேர்ட் , மற்றும் ஜொஹான் பிரடெரிக் மெக்கேல் என ஏராளமான விஞ்ஞானிகள் பூமியை முதல் முறையாக தழுவிய தினம்,முத்தமிட்ட தினம் இது. அவர்களுள் மிகவும் இளையவர். மா கரோல் ஜெமிசன் (Mae Carol Jemison (born October 17, 1956). இவர் ஒரு பொறியாளர், விஞ்ஞானி, மருத்துவர், ஆசிரியர் மற்றும் வானவியலாளர். Dr . மா ஜெமிசன் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் பரந்து விரிந்த அனுபவம் உள்ளவர் . அறிவியலின் பின்னணியில் விசாலமான அனுபவம் பெற்றிருந்த ஜெமிசன், ஆப்பிரிக்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கன் பற்றிய படிப்பிலும்வல்லவர்.ஆங்கிலம், ரஷ்ய மொழி , ஜப்பானிய மொழி மற்றும் ஸ்வாஹிலி மொழியைச் சரளமாக பேசும் திறமையாளர். அத்துடன் ஆடற்கலையிலும் சிறந்து விளங்கினார். நடனம் ஆட பயிற்சி எடுத்துக்கொண்டவர்.
அக்டோபர் 12 ம் நாள், 1956 ம் ஆண்டு, டெக்காடூர் என்ற இடத்தில் பிறந்தார் ஜெமிசன். சார்லி ஜெமிசன் என்பவருக்கும் டோரதிக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் ஜெமிசன்.கடைக்குட்டியான இவருக்கு வீட்டில் ஏராளமான செல்லம். அவர்களின் குடும்பம், ஜெமிசனுக்கு 3 வயதாகும்போது, சிகாகோவுக்கு இடம் பெயர்ந்தனர். பட்ட படிப்பு படித்தபின், வேதிப் பொறியியல் படித்தார். அதன் பின் மருத்துவம் படித்தார்.
அக்டோபர் 12 ம் நாள், 1956 ம் ஆண்டு, டெக்காடூர் என்ற இடத்தில் பிறந்தார் ஜெமிசன். சார்லி ஜெமிசன் என்பவருக்கும் டோரதிக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் ஜெமிசன்.கடைக்குட்டியான இவருக்கு வீட்டில் ஏராளமான செல்லம். அவர்களின் குடும்பம், ஜெமிசனுக்கு 3 வயதாகும்போது, சிகாகோவுக்கு இடம் பெயர்ந்தனர். பட்ட படிப்பு படித்தபின், வேதிப் பொறியியல் படித்தார். அதன் பின் மருத்துவம் படித்தார்.
மருத்துவ பட்டம் வாங்கிய பின், ஜெமிசன்,ஆப்பிரிக்கா சென்று க்யூபா, கென்யா & தாயலாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையும் உதவிகளும் செய்தவர்.இராணுவத்திலும் உதவியவர் ஜெமிசன். அவரது பணியைத்தாண்டி, ஏராளமான பணிகளை மக்களுக்கும் இராணுவத்திற்கும் ஆற்றியுள்ளார். அவர் மருந்தகம், ஆய்வகம், மருத்துவ அலுவலர்கள் போன்றோரை மேற்பார்வை செய்தார். அனைவருக்கும் மருத்துவ உதவியும் தந்து, சுய கவனிப்பு மருத்த்துவக் குறிப்புகள், பாதுகாப்பிற்காகவும், உடல் நலத்துக்காகவும் வழங்குவார்.நோய் தடுப்பு மையத்தில் ( Centre for Disease Control (CDC ))பணியாற்றினார். பல்வேறு தடுப்பூசிகளைத் தயாரிக்க பல ஆராய்ச்சிகள் செய்து உதவியவர் ஜெமிசன். அதன் பின்னர் அமெரிக்க வந்து ,அங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மருத்துவப் பணியாற்றினார்.
வாழ்வில் எதனையாவது சாதிக்கவேண்டும் என்ற மனத்திண்மையும் , அதீத ஆர்வமும் உள்ளவர் ஜெமிசன். எனவே மீண்டும் பொறியியல் படிக்க விண்ணப்பித்தார். அத்துடன், நாசாவுக்கும் விண்வெளியில் பயணிக்க விருப்பம் தெரிவித்து ,அந்த திட்டத்திலும் விண்ணப்பித்தார். முதல் முறை அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. மீண்டும் 1987 ல் நாசாவுக்கு விண்ணப்பித்தார் . அப்போது அங்கு வந்திருந்த 2000௦௦௦ மனுக்களில் 15 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவராக ஜெமிசன் இருந்தார். பின்னர் ஜெமிசன் வெற்றிகரமாக விண்வெளியாளருக்கான பயிற்சியை முடித்தார். அதன்பின்,1988 ல் நாசாவின் விண்வெளி ஓடத்தில் பறந்தார். விண்வெளியில் பறந்த 5 கறுப்பினத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் விண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண் என்று சரித்திரம் படைத்தவர் இவர் மட்டும்தான்.
வான்வெளிக்கும், பொறியியலுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் ஜெமிசன். STS 47 என்ற விண்வெளி ஆய்வகத்தின், அறிவியல் தூதுக்குழுவின் சிறப்பாளராக இருந்தார். இது ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள ஒரு கூட்டுறவு .இணைப்புக் குழுவாகும்.1992 ம் செப்டம்பர் 12 ம் நாள் வானில் விண்வெளியாளராகப் பறந்து சாதனை nikazhththinaara இந்த குழு 8 நாள் பயணத்திட்டத்தில், 127 முறை நம் பூமியை வட்டமடித்து சுற்றியது.அந்த வான்வெளி பயணத்தில் ஜப்பானியர் 44 பேரும், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி அறிவியல் மற்றும் சோதனை க்கான கருவிகளும் கொண்டு செல்லப்பட்டன.
அந்த பயணத்தில் ஜெமிசன், பறக்கும்போது மனிதர்களின் எலும்பு செல்களில் ஏற்படும் மாற்றம் குறித்தும் ஆராய்ச்சி தேடல் பொறுப்பில் இருந்தார். எட்டாவது நாள் விண்வெளியில் பறக்கும்போது,சுழியன் ஈர்ப்பு விசையில் ( Zero gravity ) விண்வெளி நோயும், எலும்பு இழப்பும் நிகழ்ந்துள்ளது எனற அதனை வெற்றிகரமாக சாதித்து முடித்தார். ஜெமிசன் தனது முதல் விண்வெளி பறப்பில், 190 மணி, 30 நிமிடம்& 23 நொடிகள் வானில் பறந்தார். அது மட்டுமல்ல, விண்வெளியில், விண்ணூர்தியில் பறந்த முதல் கறுப்பின/ஆப்பிரிக்க, அமெரிக்க பெண் இவர் மட்டும்தான். ஆனால் 1993 ல் நாசாவை விட்டு வெளியேறினார். வளர்முக நாடுகளுக்கான தொழில்நுட்பம் தயாரிக்கும் நிறுவனத்தில் இயக்குனராகச் சேர்ந்தார்.ஜெமிசன் தனது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார், மக்களுக்கு உழைப்பதில் செலவிட்டு அதில் மகிழ்வை, நிம்மதியைக் காண்கிறார் ஜெமிசன். இப் புவியில் பிறந்ததன் பலனை நிதர்சனமாகக் காண்பித்துக் கொண்டிருப்பவர் ஜெமிசன்.
-பேரா.மோகனா..
No comments:
Post a Comment