முதல் பக்கம்

Dec 5, 2011

5 ஸ்டார் சிக்கன் முந்திரி வறுவல்:


 

தேவையானவை:

சிக்கன்.................................1 /2 கிலோ
  
சின்ன வெங்காயம்/பெல்லாரி...150 கிராம்/கைப்பிடி 
 
பச்சை மிளகாய்..........................6  
 
 
முந்திரி...........................................15
 


    இஞ்சி............................................1 இன்ச் நீளம் 
      பூண்டு..........................................50 கிராம்
       
      சீரகம்................................................1 /2 தேக்கரண்டி 
      1. மிளகாய் பொடி..............................2 தேக்கரண்டி 
      2. மல்லி பொடி...................................1 தேக்கரண்டி  
      3. மிளகுப்பொடி....................................1 தேக்கரண்டி 
      4. சீரகப்பொடி......................................1 தேக்கரண்டி 
      5. மஞ்சள் பொடி..................................... ஒரு சிட்டிகை 
      6. தயிர்....................................................2 தேக்கரண்டி 
      7. எலுமிச்சை  .சாறு .........................1 தேக்கரண்டி 
      8. எண்ணெய்.........................................2 தேக்கரண்டி
      9. கறிவேப்பிலை, மல்லி தழை.........1 தேக்கரண்டி 
      10. உப்பு தேவையான அளவு..
      செய்முறை:
      • வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
      •  
      • 10 வெங்காயம் + சீரகம் வைத்து நன்றாக அரைக்கவும். 
      • மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
      • இஞ்சி+ 8 பூண்டு வைத்து நைசாக அரைக்கவும்.
      • மீதி பூண்டை உரித்து வைக்கவும்
      • .
      • பச்சை மிளகாயை அப்படியே முழுசாக வைக்கவும்
      • முந்திரியை வறுக்கவும். 
      • சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும். 
      • அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது , வெங்காயம், சீரகம், மிளகாய், மல்லி, மஞ்சள்,மிளகு, சீரகப் பொடியைப் போடவும்.   அதிலேயே தயிர் ,எலுமிச்சை, உப்பு, எண்ணெய் 2 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம், மீதி பூண்டு, பச்சைமிளகாய், வறுத்த முந்திரி போட்டு நன்கு பிசைந்து அப்படியே குளிர் பதனப்பெட்டியில் சுமார் 1மணி நேரம் வைக்கவும்
       
      •  
      •  
      •  
      •  
       
      • அடுப்பில் கடாயை வைத்து, அதில் இப்படி மசாலா புரட்டிய சிக்கனைப் போட்டு தீயை சிறிதாக குறைக்கவும்
      •  
      •  
      •  
      • எண்ணெய் விடவேண்டியதில்லை.                                        
      • ஒரு 10 -15 நிமிடம் அடுப்பிலேயே வைத்திருந்தால் சிக்கன் நன்கு வெந்துவிடும். 
      • வெந்ததும்  மேலே  கறிவேப்பிலை தூவி,இறக்கி பரிமாறவும்.  இதனை எந்த சாதம், இட்லி, சப்பாத்தி எதற்கும் இந்த சிக்கன் முந்திரி வறுவல் கன ஜோராய் இருக்கும். 
      பேரா.சோ.மோகனா

      No comments:

      Post a Comment