முதல் பக்கம்

Dec 14, 2011

அவரைக்காய் மசால்


அவரைக்காய் மசால் தேவையானவை;
  • அவரைக்காய்............1 /4 கிலோ
  • சின்ன வெங்காயம்..........10
  • தேங்காய்..........................சிறிய துண்டு
  • சோம்பு ................................1 /4 தேக்கரண்டி
  • பூண்டு..............................3
  • மிளகாய் பொடி..............1 /4 தேக்கரண்டி
  • எண்ணெய்..தாளிக்க.....2 தேக்கரண்டி
  • கடுகு+உ.பருப்பு..............1 /4 தேக்கரண்டி
  • உப்பு...............................தேவையான அளவு
  • கறிவேப்பிலை..............1 கொத்து

செய்முறை:
  • அவரைக்காயை கழுவி கொஞ்சம் பெரிதாக நறுக்கவும்./ 3 ஆக கிள்ளிகொள்ளவும் .
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
  • தேங்காய் +சோம்பை பரபரவென்று அரைக்கவும்.
  • பூண்டைத் தட்டி வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும். கடுகு,உ.பருப்பு போட்டு பொரிய விடவும்.
  • பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம+உப்பு போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், அதில் மிளகாய்ப் பொடி போட்டு வதக்கி, உடனேயே, அவரைக்காயைப் போடவும்.
  • 1/2 டம்ளர் நீர் ஊற்றவும்.தீயைக் குறைக்கவும்.
  • பத்து நிமிடத்தில் காய் வெந்துவிடும்.
  • பிறகு அதில் அரைத்த தேங்காய் +தட்டிய பூண்டு போட்டு பிரட்டி 5 நிமிடத்தற்குள் இறக்கி விடவும்.
  • இறக்கிய பின் கறிவேப்பிலையை நறுக்கி தூவவும் .
  • அவரைக்காய் மசால் சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு சரியான துணை. நிறைய நார்ச்சத்து உள்ள காய். சர்க்கரைகாரர்கள் நிறைய சாப்பிடவேண்டும்.

அவரைக்காய் பற்றிய குறிப்பு:
அவரைக்காயின் ஆங்கிலபெயர்.hyacinth bean(Dolichos lablab) , lablab bean, field bean, pig-ears, rongai dolichos, lab-lab bean, poor man's bean, also called Val Bean, Valore bean and Indian Bean.
பூர்விகம்: ஆப்பிரிக்கா. இப்போது அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
செடியாக வளர்கிறது .இந்த செடி அற்புதமாய் மண்ணிலும், காற்றிலும் உள்ள நைட்ரஜணை, nilaippaduththi ஈர்த்து போடுவதும் இதன்முக்கிய பணி.கோடை காலப் பயிர். Africa: Angola, Botswana, Cameroon, Chad, Cote D'Ivoire, Ethiopia, Gabon, Ghana, Kenya, Malawi, Mozambique, Namibia, Niger, Nigeria, Rwanda, Senegal, Sierra Leone, South Africa (Cape Province, Natal, Orange Free State, Transvaal), Sudan, Swaziland, Tanzania, Togo, Uganda, Zambia, Zimbabwe.

அவரைக்காயின் மருத்துவ பலன்கள்:
பரு, சிறுநீரக பை, சூடு காயம், இதயப் பிரச்சினை, வயிற்று உப்புசம், மாசு அகற்ற, சர்க்கரை நோய் ,வயிற்றுப்போக்கு, நீர்பிரிதல், நீர்க்கோர்வை/ மகோதரம்,சொறிசிரங்கு, விக்கல், சிறுநீரகம், கரைப்பான், கட்டி கரைப்பான் போன்ற வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இன்று உலகில் பாதிப்பேருக்கு மேல் உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவரி ஒரு மாமருந்து.

140 கிராம் அவரையில் உள்ள சத்துக்கள் :
  • கலோரிகள்.......187 (783 kJ) தினதேவை%
  • மாவுப்பொருளிருந்து.(Carbohydrate).136 ((569 kJ))
  • கொழுப்பிலிருந்து..(Fat).................5 .7 (23.9 kJ)
  • புரதத்திலிருந்து...(Protein).....................44 .8 (188 kJ)..
  • மாவுப்பொருள்.....................................௩௩.௪ கி...௧௧%
  • நார்ச்சத்து...............................................9.2 கி.. 37 %
  • சர்க்கரை............................................3 .1 கிராம்
  • மொத்த கொழுப்பு.............................0.7 கி ...1%
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலம்....20 .4 மி.கி
  • ஒமேகா 6 கொழுப்பு அமிலம்....258 மி.கி
  • புரதம்..(Protein )...................................................12 .9 கி.. 26 %
  • வைட்டமின் A.(Vitamin A).........................................25 .5 IU ..
  • வைட்டமின் C ..(Vaiittamin C)............................௦.0.5 மி.கி.1%
  • வைட்டமின் D ...(Vitamin D)...................................Nil
  • வைட்டமின் E (Alpha Tocopherol)..0.0mg . 0%
  • வைட்டமின்.K .(Vitamin K )..................4.9 mcg ..6%
  • தியாமின்....(Thiamin)......................0.2 mg ..11%
  • ரிபோபிளேவின்..(Riboflavin)........0.2 mg .9%
  • நியாசின். (Niacin )............................1.2 mg...
  • வைட்டமின் B6 ................................0.1 மி.6 %
  • போலேட்( Folate)............................177 மை. கிராம்
  • .வைட்டமின் B12 (Vitamin.B12 )......0.௦ 0mcg..0%
  • பான்டோதனிக் அமிலம் (Pantothenic acid)..0.3 மி.கி 3%
  • கோலின்..(Choline)............................52 மி.கி..
  • பீட்டைன்..............................................இல்லை
  • கால்சியம்.....(Calcium)........................61 .2 மி.கி...6 %
  • இரும்பு (Iron)........................................2 .5 மி.கி..14 %
  • மக்னீசியம் (Magnesium)..................73 .1 மி.கி. 18%
  • பாஸ்பரஸ்..(Phosphorus)................212 மி.கி...21 %
  • பொட்டாசியம்..(Potassium)............456 மி.கி..13 %
  • துத்தநாகம்..(Zinc).................................1 .7 மி.கி...11 %
  • தாமிரம்..(Copper)..................................0.4 மி.கி...22 %
  • மாங்கனீஸ் ..(Manganese)..................0.7 மி.கி...36
  • செலினியம் (Selenium)..................4 .4 மைக்ரோ கி...6 %
-பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment