முதல் பக்கம்

Dec 14, 2011

புதினா ஜிஞ்சர் சிக்கன்:



புதினா ஜிஞ்சர் சிக்கன் தேவையானவை:

  • சிக்கன் ................1/2 கிலோ
  • பெல்லாரி............4
  • இஞ்சி..................1 இன்ச் நீளம்
  • பூண்டு...................8
  • ப.மிள்காய்...........8
  • புதினா...................கைப்பிடி அள வு
  • மல்லி+கறிவேப்பிலை...கைப்பிடி அளவு
  • பட்டை.....................சிறு துண்டு
  • கிராம்பு......................4
  • ஏலம்........................2
  • எலுமிச்சை.................1/2 மூடி
  • தயிர்...........................2 தேக்கரண்டி
  • உப்பு ...........................தேவையான அளவு
  • எண்ணெய்.................30 மில்லி
செய்முறை :
  • சிக்கனை நன்கு கழுவி வைக்கவும்.
  • பெல்லாரியை நறுக்கவும்.
  • மிக்சியில் நறுக்கிய பெல்லாரி, புதினா, மல்லி, கறிவேப்பிலை,இஞ்சி,பூண்டு,கிராம்பு, பட்டை, ஏலம் அனைத்தையும் போட்டு நைசாக் அரைக்கவும்.
  • அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய் வெங்காயத்தில் பாதி போட்டு+உப்பு போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும், கழுவிய சிக்கனை நீரின்றி பிழிந்து வாணலியில் போடவும்.தீயை சிம்மில் வைக்கவும்.
  • இதனை ஒரு பத்து நிமிடம் வதக்கவும்.
  • பின் இதில் அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் வேண்டாம்.
  • இதிலேயே தயிர் எலுமிச்சை சாறு விடவும்.
  • அடுத்த பத்து நிமிடத்தில் உப்பு +ருசி பார்த்து இறக்கி விடவும்.
சிக்கன் சும்மா கலக்கலா இருக்கும். சிறு குழந்தைகள் சும்மாவே சாப்பிட்டு விடுவார்கள். எந்த சாதத்துக்கும் சூப்பர் துணை இது. செய்வது மிக மிக எளிது. என்ன நாளைக்கே செய்துவிடலாமா?
140 கிராம் (ஒரு கப் )சிக்கனில் உள்ள சத்துக்கள் :

  • கலோரிகள் ........................231 (967 kJ)..தினப்படி தேவை.%த்தில்
  • மாவு சத்திலிருந்து (carbohydrate)........௦.5 (2.1 kJ)
  • கொழுப்பிலிருந்து .............................45 .1 (189 kJ)
  • புரதத்திலிருந்து .................................185 (775 kJ)
  • புரதம்.(Protein )........................................43 .4 கிராம்...தினப்படி தேவை.%: 87 %
  • மொத்த . கொழுப்பு.(Total Fat).............5.௦ 0கி.....8%
  • ஒமேகா கொழுப்பு அமிலம்............ 98.0மி .கி
  • வைட்டமின் A (Vitamin A )....................29 .4 IU ....1 %.
  • வைட்டமின் C (Vitamin C ).....................0.௦௦ மி.கி. )%
  • வைட்டமின் D .(Vitamin D)....................இல்லை
  • வைட்டமின் E .(Alpha Tocopherol).........0.4 மி .கி ...2 %
  • வைட்டமின் K (Vitamin K)....................0.4 மைக்ரோ .கி ..1%
  • தையாமின்.(Thiamin)...............................௦.0.1 மி .கி ...7%
  • ரிபோப்லேவின்.....................................0.2 மி .கி ...9%
  • நியாசின் .(NIacin)....................................19.2 மி .கி ...96%
  • வைட்டமின்.B6 .(Vitamin B6).................0.8 ..மி .கி ....42%
  • போலேட் (Folate) ....................................5.6 மைக்ரோ கி...1%
  • வைட்டமின் B12 .(Vitamin B12)........... .0.5 மைக்ரோ .கி ...8 %
  • பான்டோதனிக் அமிலம்.....................1.4 மி .கி ......14%
  • கோலின் (Choline).....................................119 மி .கி ..
  • பீட்டைன் (Betaine)....................................8.7 மி .கி ..
  • தாது உப்புக்கள்...கால்சியம்............. 21.0மி .கி ..2%
  • இரும்பு.(Iron)............................................ 1.5மி .கி...8%
  • மக்னீசியம் (Magnesium)...........................40.6.மி .கி.10%
  • பாஸ்பரஸ் (Phosphorus)......................... 319 மி .கி...32%
  • பொட்டாசியம் (Potassium ).................... 358 மி .கி..10%
  • சோடியம் (Sodium)...................................104.மி .கி..4%
  • துத்தநாகம்..(Zinc )...................................14..மி .கி..9%
  • தாமிரம் (Copper).......................................0.1..மி .கி..3%
  • மாங்கனீஸ் .(Manganese ).......................0.0..மி .கி..1%
  • செலினியம்.(Selenium).............................38.6..மைக்ரோ .கி..55%.
--பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment