தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 28.08.2013(புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கருணா பயிற்சி மையத்தில் நடைபெற்றது.இணைச்செயலாலர் திருமிகு ஞானசுந்தரி தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் மஹபூப்பீவி முன்னிலை வகித்தார். தேனி, கம்பம், பெரியகுளம், கடமலை-மயிலை ,போடி ஆண்டிபட்டி,உத்தமபாளையம்,சின்னமனூர் உள்ளிட்ட கிளைகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போரடிய மகாராஸ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நரெந்திர தபோல்கர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை வாரியாக நடைப்பெற்ற வேலைகள் விவாதிக்கப்பட்டன.மாநில செயற்குழுவில் உபகுழு வாரியாக எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில செயலாளர் திருமிகு சுந்தர் எடுத்துக்கூறினார்.துளிர் திறன்அறிதல் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஹிரோசிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த திருமிகு.இராம் சங்கர் மற்றும் மாவட்ட செயலாளர் விவெங்கட் ராமன் அகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடனடி பனிகளாக ஆசிரியர் தினம் அன்று நிகழ்ச்சிகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. கம்பம் கிளை செயலாளர் திருமிகு முத்துக்கண்ணன் சாமிகளின் பிறப்பும் இறப்பும் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
No comments:
Post a Comment