1945ஆம் வருடம், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் அமெரிக்க நாடானது மனித குலமே வெட்கித் தலைகுனியும் வகையில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரகளில் சின்னப்பையன், குண்டுப்பையன் என்னும் இரண்டு அணுகுண்டுகளை, மானுட வரலாற்றில் முதல் முறையாக முறையே ஆகஸ்ட், 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் வீசியது. உடனடியாக 1 இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இதன் விளைவாக அந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 1 இலட்சம் மக்கள் வரை மாண்டனர்.
ஒன்றிரண்டு தலைமுறைகள் கடந்தும் இன்னும் அதன் தழும்புகள் மாறாமல் மரபணுப் பாதிப்பால் பிறக்கின்ற குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றனர். ஹிபாகுஷாக்கள் என்னும் தனி இனமாகவே சுமார் 2 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் மற்றவர்கள் திருமண உறவுகள் கொள்வதில்லை. மேலும் இன்றளவும் உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் போர்களும் பலிகளும் தொடர்கின்றன. எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஹிரோஷிமா நாகசாகி துயரங்கள் நடந்த நினைவு தினங்களை போர்களுக்கு எதிரான தினங்களாக அனுசரித்து அறிவியலை ஆக்கத்திற்காக, வளர்ச்சிக்காக, உலக ஒற்றுமைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகளை, போட்டிகளை நடத்தி வருகிறது.
மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
தேனி ஒன்றியம்: அன்னஞ்சியில் கருத்தரங்கம் & பேரணி:
தேனி ஒன்றியம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார்
மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். 170 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமிகு.சுமன் ஒருங்கிணைத்தார்.
பெரியகுளம் ஒன்றியம்: டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:
பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார்.
பெரியகுளம் ஒன்றியம்: டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:
பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார்.
அறிவியல் இயக்க மாவட்டத் துணைச்செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி ஹிரோஷிமா- நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஜெயந்தி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதியை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பேரணி நடைபெற்றது. 170 பேர் கலந்துகொண்டனர்.
ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:
ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:
கம்பம் ஒன்றியம்: சுருளிப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:
ஆக.8 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளையின் சார்பில் கருத்துரை வழங்கப்பட்டது. மாநிலச்செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கத்துடன் கருத்துரை வழங்கி பேரணியைத் துவங்கி வைத்தார்.
சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். தலைமை ஆசிரியர்கள் திருமிகு.மேகலா, திருமிகு.இராஜாத்தி மற்றும் ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ், சீதா, கலையரசி ஆகியோரும் கலந்துகொண்டனர். இறுதியில் அனைவரும் ஹிரோஷிமா தின உறுதிமொழி ஏற்றனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கடமலை ஒன்றியம்: பொன்னம்மாள்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:
ஆகஸ்ட்,8 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடமலை, மயிலை ஒன்றியக் கிளையின் சார்பில் பொன்னம்மாள் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் திருமிகு.லிங்கப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைச்செயலாளர் திருமிகு.இரத்தினசாமி செய்திருந்தார். 120 மாணவர்கள், ஆசிரியர்கள் திருமிகு.ஜெயப்பிரகாஷ், திருமிகு.பாலகிருஷ்ணன், திருமிகு.வள்ளிராணி, திருமிகு.வடிவாம்பிகை ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment