முதல் பக்கம்

Aug 27, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: 17வது மாநில மாநாடு

துவக்கவிழா: 

மாநாட்டின் சில பதிவுகளைக் காண:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17வது மாநில மாநாடு ஆக.2.2013 மாலை காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள கிருஷ்ணமஹாலில் மிகச்சிறப்பாக துவங்கியது. மாண்புமிகு.நீதியரசர் கே.சந்துரு உள்ளிட்ட சிறப்புவிருந்தினர்கள் மேளதாளங்கள் முழங்க மேடையேறினர்.

துவக்க விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி தலைமை வகித்துப் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் திருமிகு. எஸ்.ஜனார்த்தனன் முன்னிலை வகிக்க, மாநாட்டு வரவேற்புக் குழுச்செயலாளர் திருமிகு.ஜி.முனுசாமி வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்க ஸ்தாபர்களில் ஒருவரானமாண்புமிகு.நீதியரசர் கே.சந்துரு மாநாட்டைத்துவங்கி வைத்துப் பேசினார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சிநிலையத்தின் இயக்குநர் டாக்டர்.பி.ஆர்.வாசுதேவராவ் அறிவியல் இயக்க புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரைவழங்கினார். மேலும் பாவினி அமைப்பின் தலைவர் & நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரபாத் குமார், செயல் இயக்குநர்திருமிகு.டேவிட் கடவில் அந்தோணி, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்திருமிகு.சி.பி.நாராயணன், பொதுச்செயலாளர் திருமிகு.ஜி.கங்காதரன், செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியர்திருமிகு.ஜி.செல்லப்பா, முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.எஸ்.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டுவரவேற்புக்குழு பொருளாளர் திருமிகு.எ.குமார் நன்றி கூறினார்.

கல்வி & சுகாதாரம் குறித்த கருத்தரங்கம்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.எஸ்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்திருமிகு.என்.மாதவன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் தேமொழிச்செல்வி முன்னிலை வகித்தார். திருவனந்தபுரம்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.இக்பால் கருத்துரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறூப்பினர்திருமிகு.எஸ்.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

பிரதிநிதிகள் அமர்வு:

இரண்டாவது நாள் (ஆக.3) பிரதிநிதிகள் அமர்வு நடைபெற்றது. மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி தலைமைவகித்தார். மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம்முழுவதும் நடைபெற்ற அறிவியல் இயக்கப் பணிகள் குறித்த செயலறிக்கை சமர்ப்பித்துப் பேசினார்.மாநிலப்பொருளாளர் திருமிகு.எஸ்.சுப்ரமணி நிதியறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து மாவட்டவாரியாக குழு விவாதம் நடந்தது. மாவட்ட வாரியாக நண்பர்கள் குழுவிவாத அறிக்கையினைச் சமர்ப்பித்தனர்.பொதுச்செயலாளர் அதன் மீதான தொகுப்புரை வழங்கினார்.

இயற்கை வள மேலாண்மை கருத்தரங்கம்:

மாநிலத்துணைத்தலைவர் பேரா.சோ.மோகனா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன்வரவேற்றார். புதுதில்லி, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் பதிவாளர் டாக்டர்.த.வி.வெங்கடேஸ்வரன், சுற்றுச்சூழல் நிபுணர்திருமிகு.சி.இ.கருணாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சுற்றுச்சூழல் நிபுணர் திருமிகு.பி.கே.இராஜன்கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.தீனதயாளன் நன்றி கூறினார்.

பேரணி & பொதுநிகழ்ச்சி:

செங்கல்பட்டு அரிமா சங்க பொறுப்பாளர் திருமிகு.எம்.எஸ்.முருகப்பா பேரணியைத் துவங்கி வைத்தார். காஞ்சிபுரம்மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு.எம்.ஜெயவேல் தலைமை வகிக்க மாநிலச்செயலாளர் எம்.முகமது பாதுஷாவரவேற்றார். திரைப்பட இயக்குநர் திருமிகு.பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

ஆற்றல் வளங்களும் மாற்று வளங்களும் கருத்தரங்கம்:

மூன்றாம் நாள் (ஆக.4) காலை நடந்த கருத்தரங்கிற்கு BARC-WSD அமைப்பின் தலைவர் டாக்டர்.வேல்முருகன் தலைமைவகித்தார். கல்பாக்கம் விஞ்ஞான் அலுவலர் டாக்டர்.ம்.சூரியமூர்த்தி, உத்திரமேரூர் கிளைத்தலைவர்திருமிகு.எல்.வரகுணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்திருமிகு.சி.வெங்கடேசன் வரவேற்றார். சென்னை அணுமின் நிலையம் தொழில்நுணுக்க தணிக்கை அதிகாரிதிருமிகு.ஜி.இரவிசங்கர் கருத்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.த.பாரதி நன்றி கூறினார்.

இணை அமர்வுகள்:

பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. வளர்ச்சி குறியீடுகளை மக்களுக்கானதாக மாற்றிஅமைப்போம் என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர்.புஷ்பராஜ், பாடம்இதழாசிரியர் திருமிகு.கி.நாராயணன் ஆகியோரும் பாலின பாகுபாட்டை பகுப்பாய்வு செய்வோம் என்ற தலைப்பில் SBIOAதாளாளர் திருமிகு.டி.தாமஸ் பிராங்கோ, ஐ.ஐ.டி.பேராசிரியர் முனைவர்.கல்பனா ஆகியோரும் அறிவியல் வளர்ச்சியும்விழிப்புணர்வும் என்ற தலைப்பில் AIPSN செயற்குழு உறுப்பினர் பேரா.பொ.இராஜமாணிக்கம், NCSCTCன் செயலாக்கக்குழு உறுப்பினர் திருமிகு.சி.இராமலிங்கம் ஆகியோரும் தரமான கல்வி கானல் நீரா? தலைப்பில் புதிய ஆசிரியன்இதழாசிரியர் பேரா.கே.இராஜீ, யுனிசெப் ஆலோசகர் (குழந்தைகள் பாதுகாப்பு) திருமிகு.பி.பாலமுருகன் ஆகியோரும்,உணவையும் மருந்தையும் அடிப்படை ஆதாரமாக்குவோம் என்ற தலைப்பில் AIPSN முன்னாள் தலைவர் பேரா.ஆத்ரேயா, GIEA தென் மண்டலப் பொதுச்செயலாளர் திருமிகு.ஆனந்த் ஆகியோரும் தண்ணீர் நமது அடிப்படை உரிமை என்றதலைப்பில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் திருமிகு.பெ.சண்முகம், மதுரைக் கல்லூரி பேராசிரியர்முனைவர்.எஸ்.தினகரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். திருமிகு.எல்.பிரபாகரன், திருமிகு.ஜெ.ஜான்சிலிபாய் (மாநிலத்துணைத்தலைவர்) திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன் (மாநிலத்துணைத்தலைவர்), திருமிகு.அ.அமலராஜன்(மாநிலச்செயற்குழு) திருமிகு.எம்.இராதா (மாநிலச் செயலாளர்), திருமிகு.கு.செந்தமிழ்ச் செல்வன்(மாநிலத்துணைத்தலைவர்) ஆகியோர் இணை அமர்வுகளை ஒருங்கிணைத்தனர்.

புதிய நிர்வாகக்குழு:

அதனையடுத்து புதிய பொதுக்குழு, செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. செயற்குழு கூடி அடுத்த இரண்டுஆண்டுகளுக்கான மாநிலத் தலைவராக முனைவர்.என்.மணி, பொதுச்செயலாளராக திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன்,பொருளாளராக திருமிகு.எல்.பிரபாகரன் ஆகியோரும் மாநிலத் துணைத் தலைவர்களாக பேரா.சோ.மோகனா, திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன், திருமிகு.எம்.இராதா, திருமிகு.என்.மாதவன், முனைவர்.இந்துமதி ஆகியோரும் மாநிலச்செயலாளர்களாக திருமிகு.எஸ்.சுப்ரமணி, திருமிகு.மு.தியாகராஜன், திருமிகு.முகமது பாதுஷா,திருமிகு.அ.அமலராஜன், திருமிகு.ஜெ.ஜான்சிலிபாய், திருமிகு.எல்.நீலா, திருமிகு.தே.சுந்தர் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர். திருமிகு. வெங்கடேஷ் பா.ஆத்ரேயா புதியநிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநாட்டு நிறைவுரையாற்றினார். மாநிலம் முழுவதுமிருந்து தமிழ்நாடு அறிவியல்இயக்கப் பிரதிநிதிகள் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில்நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. செங்கல்பட்டு முழுவதும் போஸ்டர்கள், சுவரெழுத்துகள் என திரும்பும் திசையெங்கும்மாநாட்டுச் செய்திகள்... கூடுமான அளவில் பிளக்ஸ் பேனர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு காஞ்சி நண்பர்கள்பெருஞ்சிரத்தை எடுத்துள்ளனர். மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறாமல் இருக்கமுடியுமா? நன்றி.. நன்றி... நன்றி.. 

தே.சுந்தர்,மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பேச: 94880 11128

No comments:

Post a Comment