தேனி மாவட்டம் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கூடலூர் லோயர்கேம்ப் கிராமத்தில் சுப்பிரமனிய சந்திரசேகர் துளிர் இல்லம் 09-08-2013அன்று காலை துவங்கப்பட்டது.துளிர் இல்ல மாணவர் தமிழ் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கானஅறிவியல் கதைகளை கூறினார். சுப்பிரமணிய சந்திரசேகர் பற்றிய எளிய அறிமுகத்தை துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பொ.சுரேந்தர் எடுத்துக்கூறினார்.கம்பம் கிளை செயற்குழு உறிப்பினர் சுபாஸ் குழந்தைகளுக்கான விளையாட்டுக்களை வழி நடத்தினார்.துளிர் இல்ல தலைவராக பொ.தினேஸ் குமார்,செயலாளராக யோகிசிவசங்கர்,பொருளாளராக பெஸ்வன் ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாதம் ஒரு முறை துளிர் இல்லம் தவறாமல் கூட வேண்டும் என குழந்தைகள் கேட்டுக்கொண்டனர்.இறுதியில் துளிர் இல்ல செயலர் யோகி நன்றி கூறினார்....
வி.வெங்கட் ராமன் .மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment