அன்புடையீர்,
வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை வலியுறுத்தியும் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளையும் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி இயக்கத்தையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வுகளில் தங்கள் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
போட்டிகளின் விபரம் பின்வருமாறு:
6,7,8 மாணவர்களுக்கு: ஓவியப்போட்டி :
தலைப்பு: அறிவியலால் அழகு செய்வோம் இப்பூவுலகை...
அளவு:(30*45செ.மீ.சார்ட்)
9,10,11,12 மாணவர்களுக்கு: கட்டுரைப்போட்டி;
தலைப்பு: ஆற்றல் தேவைகளும் மாற்று வழிமுறைகளும்
(4 பக்க அளவில் ... சொந்த கையெழுத்தில்)
கல்லூரி மாணவர்களுக்கு: கவிதைப்போட்டி:
தலைப்பு: சாதிமதங்களின் வேலிக்குள்ளே நாம்!?
(20 வரிகளில் .... சொந்த கையெழுத்தில்)
தலைப்பு: சாதிமதங்களின் வேலிக்குள்ளே நாம்!?
(20 வரிகளில் .... சொந்த கையெழுத்தில்)
ஆசிரியர்களுக்கு: கட்டுரைப்போட்டி:
தலைப்பு: அறிவியல் வளர்ச்சியும் மனிதகுல ஏற்றத்தாழ்வும்
(4 பக்க அளவில்... சொந்த கையெழுத்தில்)
தலைப்பு: அறிவியல் வளர்ச்சியும் மனிதகுல ஏற்றத்தாழ்வும்
(4 பக்க அளவில்... சொந்த கையெழுத்தில்)
ஆர்வலர்கள்/சுய உதவிக்குழுவினருக்கு: கட்டுரைப்போட்டி:
தலைப்பு: உலகமயத்தால் மாயமாகும் உள்ளூர் வளங்கள்
(4 பக்க அளவில் .... சொந்த கையெழுத்தில்)
தலைப்பு: உலகமயத்தால் மாயமாகும் உள்ளூர் வளங்கள்
(4 பக்க அளவில் .... சொந்த கையெழுத்தில்)
படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி:
திருமிகு. எஸ்.ராம்சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹிரோஷிமா தின போட்டிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், டிரயம்ப் பள்ளி, பெரியகுளம் ,பேச: 9952511460, 9488683929, 9942112203,9488011128
No comments:
Post a Comment