முதல் பக்கம்

Aug 9, 2013

சுருளிப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:


ஆக.8 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளையின் சார்பில் கருத்துரை வழங்கப்பட்டது. மாநிலச்செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கத்துடன் கருத்துரை வழங்கி பேரணியைத் துவங்கி வைத்தார்.


சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். தலைமை ஆசிரியர்கள் திருமிகு.மேகலா, திருமிகு.இராஜாத்தி மற்றும் ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ், சீதா, கலையரசி ஆகியோரும் கலந்துகொண்டனர். இறுதியில் அனைவரும் ஹிரோஷிமா தின உறுதிமொழி ஏற்றனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment