தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 & 9 தேதிகளில் ஹிரோசிமா நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆர்வலர்கள் பங்கு பெறும் போட்டிகளை நடத்தி வருகிறது. மாநில மையம் அறிவித்த தலைப்புகளில் தேனி மாவட்டத்தில் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.பத்திரிக்கை செய்தி தரப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5 கல்லூரிகளுக்கு தபால் மூலம் போட்டிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மாவட்டத்தில் இருந்து 135 ஓவியங்கள், 82 கட்டுரைகள், 17 கவிதைகள் பெறப்பட்டன. ஹிரோடிமா நாகசாகி நினைவு தினப்போட்டிகளை பெரியகுளம் கிளை செயலாளர் திருமிகு ராம்சங்கர் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment