முதல் பக்கம்

Sep 8, 2013

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினப்போட்டி முடிவுகள்-2013

நண்பர்களே. 

நமது தேனி மாவட்டத்தில் 2011ம் ஆண்டிற்கான ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். பெரியகுளம், தேனி, கடமலைக்குண்டு, கம்பம், உத்தம்பாளையம், போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி ஆகிய கிளைகளின் சார்பில் நடைபெற்ற 5 பேரணிகள், 9 கருத்துரைகள், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் உள்ளிட்ட 20 நிகழ்ச்சிகளில் சுமார் 30 பள்ளிகள், 4கல்லூரிகள், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ,சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்டந்தழுவிய அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பேரியக்கமாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின நிகழ்வுகள் அமைந்தன. 

போட்டி முடிவுகள்: ஓவியப்போட்டி

அறிவியல் அமைதிக்கே என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்திருந்தது. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியலால் அழகு செய்வோம் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் பெரியகுளம் ஸ்ரீரங்க கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாணவன் ம.ஆரோக்கிய ஆகாஸ் முதல் இடத்தையும் நாகையகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சு.விஜய் இரண்டாம் இடத்தையும் தேனி மேலப்பேட்டை மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர் சூரியப் பிரதாப், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி மாணவர் அப்சர் யாசர் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி:

9முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆற்றல் தேவைகளும் மாற்று வழிமுறைகளும் என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் இராய்ப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் மு.தினேஸ்குமார் முதல் இடத்தையும் தேனி மேலப்பேட்டை மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர் கு.லோககணபதி இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி ஞா.ரம்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி:

கல்லூரி மாணவர்களுக்கான சாதி மதங்களின் வேலிக்குள்ளே நாம் என்ற தலைப்பிலான கவிதைப்போட்டியில் சக்தி கல்வியியல் கல்லூரி மாணவர் எஸ்.கார்த்திகேயன் (சின்னமனூர்) முதல் இடத்தையும் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி மாணவியர் வி.மோகன திலகம், எஸ்.யாழினி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர். 

ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி:

ஆசிரியர்களுக்கான அறிவியல் வளர்ச்சியும் மனிதகுல ஏற்றத்தாழ்வும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பெரியகுளம் ஸ்ரீரங்க கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இரா.ஜெகநாதன் முதல் இடத்தையும் தும்மக்குண்டு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மொ.சௌந்திரராஜன் இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை வே.ஜெயந்தி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். 

ஆர்வலர்கள் & சுய உதவிக்குழுக்களுக்கான கட்டுரைப் போட்டி:

ஆர்வலர்கள் & சுய உதவிக்குழுக்களுக்கான உலகமயத்தால் பறிபோகும் உள்ளூர் வளங்கள் என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை வி.முத்துலட்சுமி முதல் இடத்தையும் தேனி கலை அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர் பி.சங்கரநாராயணன் மற்றும் கம்பம் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

போர்களுக்கெதிராகவும் அணு ஆயுதங்களுக்கெதிராகவும் ஒன்றிணைவோம்.. 

அன்னை பூமியின் அழகை,அற்புதங்களை நேசிப்போம்.. அழியாது காப்போம்.. 

அறிவியல் ஆக்கத்திற்கே.
அறிவியல் அமைதிக்கே..
அறிவியல் உலகஒற்றுமைக்கே என்பதை உரத்துச்சொல்வோம்..

No comments:

Post a Comment