தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத் தலைவர் திருமிகு லட்சுமிவாசன் தலைமை வகித்தார். பள்ளித்தலைமையாசிரியர் வரவேற்றார். உத்தமபாளையம் கிளைத் தலைவர் திருமிகு. வளையாபதி வாழ்த்துரை வழங்கினார். கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர். க.முத்துக்கண்ணன் ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்திப் பேசினார். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது போன்ற நிகழ்வுகளில் புத்தக்கங்களை அறிமுகப்படுத்துவது நல்ல வரவேற்ப்பை தருகிறது. பல ஆசிரியர்கள் அப்புத்தகங்களை நம்மிடம் கேட்டிருந்தனர். தொடர்ச்சியாக இப்பணிகளில் கவனம் செயல்படுவது அமைப்பிற்கு நல்லது.
No comments:
Post a Comment