தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கூடலூர் வீ-கேன் பயிற்சி மையத்தில் மென்பொருள் விடுதலை நாள்(software freedom day) கருத்தரங்கம் செப்டம்பர் 21 அன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெ.முருகன் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கருத்தாளர் ஓவியா தனசேகரன் கணினியில் மென்பொருள்களின் பயன்பாடு குறித்தும் கட்டற்ற மென்பொருள்களின்(Free software)அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். விலை கொடுத்து வாங்க வேண்டிய இயங்குதளத்திற்கு மாற்றாக(operating system)இலவச இயங்குதளத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார்.இலவச மென்பொருள்கள்,இலவச இயங்குதளம் அடங்கிய குறுந்தகடை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் வெளியிட்டார். கம்பம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் அனைவருக்குமானது,அறிவியல் மக்களுக்கானது, என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment