முதல் பக்கம்

Sep 22, 2013

நரெந்திர தபோல்கர் படுகொலை கண்டன கூட்டம்:

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்கும் மந்திர தந்திர வித்தைகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வந்த மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 20 அன்று புனேயில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அடிப்படையில் மருத்துவராக இருந்து கொண்டு மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியவர் தபோல்கர்.3000 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவியல் அணுகுமுறையை மக்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அவரது படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை மற்றும் த.மு.எ.க.ச.கம்பம் கிளை இணைந்து செப்டம்பர் 4 அன்று கம்பம் அக்குபஞ்சர் அகாடமியில் கண்டன கூட்டம் நடத்தியது.அறிவியல் இயக்க கம்பம் கிளை தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.த.மு.எ.க.ச. கம்பம் கிளை செயலர் திருமிகு அய்.தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார்.அறிவியல் இயக்க மாநில செயலாளர் திருமிகு.தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,த.மு,எ.க.ச மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.டாக்டர்.வனராசா இதயகீதன்,மாவட்ட செயலாளர் திருமிகு.அ.உமர்பாரூக்,அறிவியல்இயக்க கம்பம் கிளை பொருளாளர் திருமிகு.தனசேகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். த.மு,எ.க.ச மாநில குழு உறுப்பினர்திருமிகு.க.மா.சிவாஜி தொகுப்புரை வழங்கினார்.அறிவியல் இயக்க கம்பம் கிளை செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment