முதல் பக்கம்

Sep 22, 2013

மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சி:

31-08-13 சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் குண்டல நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில கருத்தாளர் திருமிகு வீரையா பங்கேற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.கிராமக் கல்வி குழு உறுப்பினர் திருமிகு வீரமுத்து அவர்கள் முன்னிலை வகித்தார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மாணவர்கள் மத்தியில் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு வீரையா அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை வழி நடத்தினார்.170 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் கல ந்து கொண்டனர்.இறுதியல் ஆசிரியர் கமல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment