அன்புடன் தேனி.சுந்தர்
முதல் பக்கம்
Jan 26, 2012
கிராமக் கல்விக்குழு பயிற்சி
Labels:
மாவட்டக்கிளை
மாவட்டச் செயற்குழு-பொதுச்செயலாளர் வருகை
மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
ஜனவரி,22,2012-அன்று மாலை 4 மணி முதல் தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள், மாநில செயற்குழு முடிவுகள்-புத்தக வெளியீடு, புத்தக விமர்சனக் கூட்டம்,புத்தகக் கண்காட்சி, துளிர் சிறப்பு மலர், சக்சார் பாரத், அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் கிராமக் கல்விக்குழு பயிற்சி, கல்வி தொடர்பான மூன்று ஆய்வுகள், இளைஞர் அறிவியல் திருவிழா, தேசிய கணித ஆண்டு நிகழ்வுகள், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை பற்றி பேசினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். துளிர் இல்லங்கள் அமைப்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நடைபெறவுள்ள பயிற்சி பற்றியும் துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு. அ.அமலராஜன் பேசினார். சமம் அமைப்பினை உருவாக்குவது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.பத்மா பேசினார். அமைப்பின் நிதிநிலைமையை
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
Subscribe to:
Posts (Atom)