முதல் பக்கம்

Jan 17, 2012

வானவியலாளர் சைமன் மாரியஸ் பிறந்த தினம்


   

      

சைமன் மாரியஸ்( Simon Marius (Latinized from German Simon Mayr) (January 10, 1573 – December 26, 1624) ) என்னும் ஜெர்மன் நாட்டு வானவியலாளர் , வானவியலாளர் டைக்கோ பிராக்கியின் மாணவர். கலிலியோவின் சமகாலத்தவர். இவர் 1573 ம ஆண்டு, ஜனவரி 10 ம நாள்,கூன்சென்ஹாசென்( Gunzenhausen ) என்னுமிடத்தில் பிறந்தார். சைமனின் தந்தை அந்த நகரின் மேயர் பொறுப்பில் இருந்தார். 1586 -1601 வரை சைமன், ஹீல்ஸ் புரோனில் ( Heilsbronn)உள்ள லூதரன் அகாடமியில் படித்தார்.இந்த காலகட்டத்தில்தான் சைமனுக்கு வானவியலில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் அவர் வானவியல் மற்றும் சீதோஷ்ணநிலை அறியும் நிலையங்களுக்குச் சென்று அதனைப்பற்றி அறிந்து கொண்டார்.1596 ல் ஒரு வால்மீன் வருவது தொடர்பாக எழுதினார். அதன் தொடர்பாக 1599 ல் சைமன் ஓர் வானவியல் அட்டவணை வெளியிட்டார். பின் அவர் படித்த அகாடமியிலே கணிதவியலாராக பணியாற்றினார். 1609 ல் சைமன் எக்ளிடின் தனிமங்கள்( Euclid 's elements) பற்றி மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பின் தொலைநோக்கியை வான் நோக்கி திருப்பி வானியல் பொருட்களை ஆராய்ந்தார். வியாழனையும் அதன் பெரிய துணைக்கோள்களையும் கண்டறிந்தார். அவரிற்கு அயோ, யுரோபா, கனிமேடு & காலிஸ்டோ என்றும் பெயர்கள் சூட்டினார். அவர் கண்டுபிடித்த திற்கும், கலிலியோ கண்டுபிடித்த திற்கும் இடையில் பிரச்சினைகள் வந்தன. ஆனால் சில நாட்கள் கழித்து என்பது நிரூபணமாயிற்று. ஆனால் வியாழனின் துணைக் கோள்களுக்கு பெயர் வைத்தவர் சைம்னதான். இவர்தான் ஆண்ட்ரோமிடாவில் உள்ள நெபுலாவையும் கண்டு பிடித்தார். சூரியப் புள்ளிகளையும் கண்டறிந்தார். அது மட்டுமல்ல, பூமி மற்றும் வியாழன் போன்றவை சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறினர். இன்று நிலவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு சைமனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பேரா.மோகனா

No comments:

Post a Comment