முதல் பக்கம்

Jan 17, 2012

உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டரின் பிறந்த நாள்

  
    
   சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஒரு அமெச்சூர் வானவியலாளர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ( Joseph Jackson Lister, FRS (11 January 1786 – 24 October 1869) என்பதாகும். அவரின் பிறந்த நாள் இன்று நம்மிடையே சங்கமிக்கிறது. அவர் கண் கண்ணாடிகள் செய்வதில் வல்லவர். ஓர் இயற்பியல் வாதியும் கூட. நவீன அறுவைசிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தையும் கூட. ஜோசப் ஜாக்சன் லிஸ்டரின் தந்தையின் பெயர் ஜான் லிஸ்டர்.அன்னையின் பெயர் மேரி.  ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் பிறந்த கடைசி மகன்தான் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே, கண்ணாடி பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14  வது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் ஒயின் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். அதிலேயே அவர் சிறப்பாக செயல்பட்தார். பிறகு  4 ஆண்டுகளுக்குப்பின்,  அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 வது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821 ல் தனது மைத்துனருடன், கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார். 

   நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், ௧௬ ம நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், மச மசவென்று கலங்கலாகத் தெரிந்ததுதான். பல முன்னேற்றங்கள்  ஏற்பட்டும் கூட, இந்த பிரச்சினை பல நூறு ஆண்டுகளுக்கு இது தொடர்ந்தது.ஆனால் இறுதியில் லென்சின் அபரேஷன் (aberration  ) எனப்படும் உருவம் கசங்கலாகத் தெரியும்  பிரச்சினைக்கு முடிவு கட்டியவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்தான்.அருமையாக நுண்ணோக்கி மூலம் பார்க்க வழி செய்த பெருமை இவரையே சேரும்.  இவர் ஒரு அமெச்சூர் நுன்னோக்கியல்வாதிதான். ஆனாலும் கூட, லென்சின் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைப் பொருட்களையும் தெளிவாகப் பார்க்க வகை செய்தார். ஜோசப் அற்புதமாக  ஒரு நுண்நோக்கியை ௧௮௨௬ ல் உருவாக்கினார். இன்றும் கூட அது லண்டன் அருங்காட்சியகத்தில் பத்திரமாக, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
      

ஜோசப்பின் நுண்ணோக்கி உருவாக்கத்தால், ௧௮௩௨ ல், இங்கிலாந்தின் ராயல் கழகத்தில் (fellowship of the Royal Society in 1832) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மிகவும் கெளரவம் மிக்க பொறுப்பாகும். அதன் மூலம், அவர் நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது. முதல் முதல் இரத்தத்தின் சிவப்பணுவை உருப்பெருக்கியில் முதன் முதல் கண்டவர், மற்றவர்களுக்கு காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மட்டுமே.


பேரா.மோகனா.

No comments:

Post a Comment