ஜனவரி,17,2012 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளையின் சார்பில் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவில் கலிலியோ துளிர் இல்லம் துவங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் துவங்கிவைத்துப் பேசினார். ஆசிரியர் மா.கணேசன் குழந்தைகளுக்கு பொம்மலாட்டக் கலை தொடர்பான பயிற்சியளித்தார். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளராக இரா.இராஜ்குமார் தேர்வுசெய்யப்பட்டார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் துளிர் இல்லச் செயல்பாடுகள் பற்றி பேசினார்.
No comments:
Post a Comment