முதல் பக்கம்

Jan 22, 2012

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


ஜனவரி,10,2012 அன்று மாலை தேனி-அல்லிநகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் மாநிலச் செயற்குழு தகவல்களைக் கூறினார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தானே புயல் நிவாரண நிதி சேகரிப்பு, துளிர் இல்லத் தொண்டர்களுக்கு தென் மண்டல அளவிலான பயிற்சி முகாம், மே மாதம் மாநிலச் செயற்குழு ஆகியவை பற்றி பேசினார். கிளைக்கூட்டங்களை உடனடியாகக் கூட்டுவது. கிளைகளுக்கான பொறுப்பாளர்களாக கம்பம்-ஸ்ரீராமன்,சுந்தர், போடி-சிவாஜி,தெய்வேந்திரன், தேனி-சுந்தர்,ஜேசுராஜ், ஆண்டிபட்டி-கருணாநிதி,தெய்வேந்திரன், பெரியகுளம்-செந்தில்குமரன்,மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். எஸ்.சிவாஜி, மு.தெய்வேந்திரன், வி.வெங்கட்ராமன், மா.மகேஷ், அ.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment