முதல் பக்கம்

Jan 22, 2012

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்-ஜனவரி,2012


ஜனவரி,22,2012-இன்று மாலை 4 மணி முதல் தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள், மாநில செயற்குழு முடிவுகள்-புத்தக வெளியீடு, புத்தக விமர்சனக் கூட்டம்,புத்தகக் கண்காட்சி, துளிர் சிறப்பு மலர், சக்சார் பாரத், அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் கிராமக் கல்விக்குழு பயிற்சி, கல்வி தொடர்பான மூன்று ஆய்வுகள், இளைஞர் அறிவியல் திருவிழா, தேசிய கணித ஆண்டு நிகழ்வுகள், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை பற்றி பேசினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்துப் பேசினார்.

துளிர் இல்லங்கள் அமைப்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நடைபெறவுள்ள பயிற்சி பற்றியும் துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு. அ.அமலராஜன் பேசினார். சமம் அமைப்பினை உருவாக்குவது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.பத்மா பேசினார். அமைப்பின் நிதிநிலைமையை மேம்படுத்துவது பற்றி மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் பேசினார். அதனைத் தொடர்ந்து பின்வரும் செயல்பாடுகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சமம் உபகுழு செயல்பாடுகள்-எஸ்.சேசுராஜ், ஆரோக்கிய இயக்கம்-மு.தெய்வேந்திரன், தேசிய கணித ஆண்டு-எஸ்.ராம்சங்கர், சர்வதேச நீடித்த நிலைத்த ஆற்றல் ஆண்டு-ப.ஸ்ரீதர், தேசிய அறிவியல் தினம்-எம்.சிவக்குமார், கல்வி ஆய்வுகள்-ஆர்.இளங்கோவன், துளிர் இல்லம்-க.முத்துக்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக மாநிலப் பொதுச்செயலாளர் திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் தேனி மாவட்ட அமைப்பிற்கு வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார். முனைவர்.ஜி.செல்வராஜ், மா.ஆனந்தகுமார், ஆர்.அம்மையப்பன், அ.சதீஷ், எஸ்.மனோகரன், கொ.ஜெகதீசன், ப.மோகன்குமாரமங்கலம், ஜெயமுருகன், பெ.ஆண்டவர், ரமேஷ் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment