தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் இன்று (19.01.2012) மாலை கூடலூர் சுந்தரவேலவர் திருமண மண்டபத்தில் தேசிய கணித ஆண்டு துவக்கவிழா கருத்தரங்கம் மற்றும் தேசிய அளவில் இளம்விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது.
கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளித் தாளாளர் திரு.கே.பி.அச்சுதன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்புரை நல்கினார். உத்தம்பாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியின் கணிதவியல் துறைப் பேராசிரியர்.முனைவர்.மு.முகமது ஷெரிப் கணித மேதை இராமானுஜம் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு 2012ம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது பற்றியும் இராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு 2011ம் ஆண்டிற்கான இளம்விஞ்ஞானி விருதுபெற்ற பொ.சுரேந்தர், மு.தீபன், க.தினேஸ்குமார், மா.பகவதிராஜா, மு.சுபாஷ் ஆகிய மாணவர்களுக்கு மாவட்ட உதவி வன அலுவலர் திரு.டி.முத்துக்குமார் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்புரை வழங்கினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் திரு.ஹ.ஸ்ரீராமன், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.பொ.கதிரேசன், ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.ஆர்.இளங்கோவன், ஆசிரியர் திரு.அ.செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். கிளைப்பொருளாளர் ஓவியாதனசேகரன் நன்றி கூறினார். அறிவியல் இயக்க ஆர்வலர் திரு.வே.இராஜசேகரன், வனக்காப்பாளர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்கத்தின் தொண்டர்கள் ஆர்.இராஜ்குமார், சி.ஈஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment