அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் சமுதாயப் பங்கேற்பு என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிராமக் கல்விக்குழு / பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு அடுத்த வாரம் முதலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர் -களுக்கான பயிற்சி முகாம் கடந்த ஜனவரி,24,25 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. ஒவ்வோரு மாவட்டத்திலிருந்தும் ஒரு அறிவியல் இயக்க கருத்தாளர், ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், ஒரு ஆசிரியர் பயிற்றுநர் என மூன்று தரப்பிலிருந்தும் 90 பேர் கலந்துகொண்டனர். தேனி மாவட்டத்தின் சார்பில் மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் கலந்துகொண்டார்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி-2009, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உட்கூறுகள், முழு பள்ளி வளர்ச்சித்திட்டம், தரமான கல்வி, கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, குழந்தைகள் உரிமைகள் மற்றும் செயல்பாடுகள், விளையாட்டுகள் என பல்வேறு தலைப்புக்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இணை இயக்குநர் திருமிகு.நாமகிரி பயிற்சியின் நோக்கம் குறித்துப்பேசினார். எவ்விதக் குறையும் இல்லாத வகையில் பயிற்சியை வெற்றிகரமாகக் கொண்டுசெல்லவேண்டும் என வலியுறுத்திச் சென்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ரகுராமன் மூன்று அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். டெல்லியிலும் கூட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டினார். நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி, மாநிலப் பொதுச்செயலாளர் திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் ஆகியோர் பங்கேற்றனர். மாநிலத்துணைத் தலைவர்கள் திருமிகு.என்.மாதவன், திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் திருமிகு. எஸ்.சுப்ரமணி இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியினை முழுமையாக ஒருங்கிணைத்தார். அடுத்து மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் அனைத்து மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சினை சிறப்பாக, அறிவியல் இயக்க நண்பர்கள் வழக்கம்போல திட்டமிட்டுச் செயல்படுவோம்.
அன்புடன் தேனி.சுந்தர்
SSA programme is going on very effectively in all over tamilnadu and the BRTEs and CRTEs are doing their best. but the problem is the Junior people appointed through TRB are teaching in the class and the senior people are watching. The programme will get succeed if only the senior teacher recognise the speech of the BRTEs. But in more occasions the teachers are not listening the classes and they are simply make conversation with others in the class. this situation affects the other interested teachers who like to develope the knowledge by getting the messages given by BRTs. The BRTEs are also not able to control them in the training classes.The only solution to get the programme success is to utilise the senior teachers to act as BRTE in rotation basis so that the class will go on with out any interruption.
ReplyDelete