முதல் பக்கம்

Feb 1, 2012

ரசவாதமும்.. வேதியலும்..!



கதை கேளு..கதை கேளு..
நம் எல்லோருக்குமே, கதை கேட்பது என்றால் மிகவும் பிடித்தமானஒரு செயல்தான்.அது சுவாரசியமான் விஷயம்தான். அதுவும் சுவையான தகவல்களையும், கொஞ்சம் கற்பனையும் கலந்து கட்டித் தந்தால் கேட்கவே வேண்டாம். அனைவரும் சாப்பாடு கூட மறந்து கதை கேட்பார்கள். நமது சின்னத் திரையில் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது. உலகில் நடந்த அனைத்து விஷயங்களும் கதையும் வரலாறும்தானே..! ஒருவர் வாழ்ந்த காலத்தில் நடந்த தகவல்களைப் பதிவு செய்து அதனைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் திருப்பிப் பார்த்தால் அதுதான், வரலாறு/சரித்திரம். பதிவு செய்வதுதான சரித்திரம்.

கொஞ்சம் சுவை கூடினால் அது கதை. அது போலத்தானே அறிவியலும் சந்தோஷங்கள், சாதனைகள், சங்கடங்கள், சாமர்த்தியம், சண்டை, சமாதானம் இவற்றுடன்தானே உருவாகி இருக்க முடியும்?வேதியலும் இதற்கு விதிவிலக்கல்லவே..!

வேதியல் வரலாறா? கதையா?கலையா?
அறிவியலோ/அது பற்றிய நிகழ்வோ நடந்தபோது, யார் யார் ஈடுபட்டு செய்தனர், என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்பட்டன, அதன் குணம்,செயல்பாடு என்ன, அவர்கள் என்ன செய்தார்கள், எப்படி ஒரு பொருள்/ கருத்து மீது விவாதம் செய்தார்கள் என்ற தகவல் பதிவு அனைத்தும் வரலாறே..! இப்படித்தான் அறிவியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு , நாம் அவற்றை அறிந்து கொள்கிறோம். என்னதான் பதிவு செய்யப்பட்டாலும் கூட சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.அறிவியல் சோதனையில் உயிர்த்த்தியாகம் செய்தவர்களும் இருக்கலாம். வேதியலின் வரலாறும்,கதையும், வேதியல் போலவே, காரம், மணம் மற்றும் சுவை மிக்கது. மனிதனின் வேதியல் பற்றிய ஆர்வமும் அது தொடர்பான தகவல்களும் கி.மு. 3 ,000 ஆண்டுகளிலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. அப்போது வேதியலை ஒரு கலையாகக் கருதினர்.

உலகின் முதல் வேதியலாளர்..பெண்..!
அழிந்த மெசபடோமிய அரணமனை
உலகின் முதல் வேதியல் விஞ்ஞானி யார் தெரியுமா? ஒரு பெண்தான்.! தப்புட்டி-பெலாட்டிகல்லிம் (Tapputi-Belatekallim) என்பதே பெண் வேதியலாளரின் பெயர் .இவர்தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் வேதியியலாளர் என்று தெரிய வருகிறது .. இவர் வாசனை திரவியங்கள் தயாரித்தது தொடர்பான தகவல்கள் களிமண் மண் பலகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் வயது கி.மு.2,000.ஆண்டுகள். அந்த களிமண் பலகைகளை குயூநிபாரம் பலகைகள் என்று அழைக்கப்படுகின்றனர் .அவை உலகின் முதல் மனித நாகரிக சமுதாயம் வாழ்ந்த "நாகரிகத்தின் தொட்டில்"என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாவிலிருந்து கிடைத்துள்ளது. தப்புட்டி மலர்களையும், எண்ணெயையும், கோரைப்புல் (cyperus) , மைரா என்ற வெள்ளைப் போளம் (myrrh) மற்றும் காசித்தும்பை (balsam)போன்ற நறுமணச் செடிகளையும் பயன்படுத்தி நீர்கலந்து, காய்ச்சி வடிகட்டல் (Distillation) முறையில்         உடலுக்குத் தடவும்/தெளிக்கும் வாசனைத் திரவியங்களைத் தயாரித்தார். அதே முறைதான் இன்றும் காய்ச்சி வடிகட்டலுக்குப் பயன்படுகிறது. இந்த தகவல்தான் இன்று வரை வேதியல் பற்றிக் கிடைத்துள்ள மிகப் பழமையான குறிப்பாகும்.. தப்புட்டியே, அரண்மனையில் மேற்பார்வையாளராக பணி செய்துகொண்டு, நினு (Ninu.) என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து ஆராய்ச்சியும் செய்தாராம்.

4 300, ஆண்டு வயதுள்ள சென்ட் பாட்டில் கண்டுபிடிப்பு..!



 
                                          தப்புட்டி..தகவல்கள் உள்ள களிமண் பலகை

4,300 ஆண்டுக்கு முந்தைய மெசபடோமியா ஆராய்ச்சி சாலை..2005ல்

சமீபத்தில் 205ல்,அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்களின் மூலம் ,தப்புட்டியின் செண்ட் பாட்டில் தயாரிப்பே இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் மிக மிகப் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த வாசனைத் திரவியங்கள் சுமார் 4 ௦,000 ஆண்டு ௦ வயதுக்கு மேற்பட்டவை.இங்கே சுமார் 60 படங்களும், வாசனை திரவியம் செய்ய கலக்கும் கிண்ணங்களும், புனல்களும், வாசனை திரவிய பாட்டில்களும், சுமார் 4 ,000 ச.மீ. இடம் கொண்ட தொழிற்சாலைக்குள் கிடைத்துள்ளது. அந்த இடத்தில் கிடைத்துள்ள வாசனை திரவிய பாட்டில்களின் அடியில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச சொச்ச சென்ட்/திரவியத்தின் தன்மை அறிந்து, அது போலவே ,4 சென்ட்/வாசனை திரவிய பாட்டில்களை தயாரித்துள்ளனர்.

வேதியல்..என்றால் என்ன?
வேதியல் என்ற சொல் எங்கிருந்து உருவானது என்று தேடினால் அது விவாதத்துக்கு உள்ளதாகவே இருக்கிறது. உலகிலுள்ள அனைவரும் மாற்றுக் கருத்தின்றி, வேதியல் என்ற வார்த்தை ரசவாதத்தின் ஆங்கில சொல்லான Alchemy என்பதிலிருந்துதான் உருவானது என்று ஆழமாக நம்புகின்றனர். . chem எனற வார்த்தை ஒரு எகிப்திய சொல். இதன் பொருள் : நைல் நதியை சுற்றியுள்ள சமவெளிகளின் வளமைத்தன்மையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்தது.கெம்(Chem') என்ற சொல் எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.இதன் பொருள் "கருப்பு பூமி" என்பதே..! எனவே அல்கெமி என்பத்ற்கு கருப்பு பூமியின் கலை ('art of the black earth) என்பதுதான். அதேபோல, கெமியா ('chemeia) என்ற கிரேக்க வார்த்தைக்கு, உலோக வார்ப்புக் கலை (the art of metal casting) என்பதாகும்.

எகிப்தியர்களும்.. வேதியல் தகவலும்..!

ரசவாத தொழிற்சாலை

எகிப்தியர்கள்தான் இறப்புக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்று நம்பினர். அதானால்தான், மனிதர்கள் இறந்த பின் அந்த உடலைப் பதப்படுத்தி பாடம் செய்து, பின்னர் அடுத்த உலகில் அந்த உடலுடன் அவர்கள் வாழ்வதற்கு வேண்டிய உணவு, விரும்பிய விலங்குகள், நகைகள், பாத்திரங்கள் என உடன் வைத்தனர். ராஜாக்கள் இறந்துவிட்டால் அவர்களுடன், அவர்களுக்குப் பணி புரிய அடிமையையும் மம்மி ஆக்கி இறந்த அரசர் மம்மியுடன் பாதாள் அறையில் அடைத்துவிடுவார்கள்.எகிப்தியர்கள். இறந்த உடலைப் பதப் படுத்தும் முறைதான், வேதியலுக்கான கருவைத் தந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

புனித அறிவியல் தவழ்ந்த எகிப்து..!

எகிப்து நாட்டை கி.மு. 332 ல் மகா அலெக்சாண்டர் ஆட்சி புரிந்தார். கிரேக்க தத்துவவாதிகள் எகிப்திய முறைகளில் சுவையாக காரியங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஒரு பொருள் என்பது தீ, பூமி, காற்று & நீர் என 4 பொருள்களாலும் இணைத்து உருவானது என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். எனவே இவை எகிப்தின் இந்தகருத்துடன் அறிவியலும் இரண்டறக் கலந்திருந்தன. இதனால் இவர்கள் தங்களின் அறிவியலை புனித அறிவியல் என்று அழைக்கின்றார்.

ரசவாதம்..! ..ரசனையான வாதமா?

இளம் நண்பர்களே.. ரசவாதம் என்றால் என்ன என்று தெரியுமா? இது ஏதோ பக்கவாதம் போன்ற வியாதி பற்றிய விஷயமல்ல .தங்கம் செய்வது எப்படி என்பதும், மலிவான உலோகங்களிருந்து உயர் மதிப்பு கொண்ட தங்கத்தை உருவாக்குவது தான் ரசவாதம்...! என்ன தங்கம் செய்வதா.?. இந்த வழி தெரிந்தால், இப்போது தங்கம் விற்கும் விலையில் நாமே வீட்டுக்கு வீடு தங்கம் செய்துவிடலாம் என்கிறீர்களா? அப்படித்தான் முன்பு ஒரு காலத்தில் சில தத்துவ ஞானிகள் நம்பினர். செய்தும் பார்த்தனர். தங்கம் செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்தனர். ஆனால் ஒண்ணும் செல்லுபடியாகலே .! தத்துவஞானிகள், தங்கத்துக்குப் பதிலாக பல்வேறு உலோகங்களைக் கண்டுபிடித்தனர்.

விளைவிக்கப்படும்..தங்கமே..தங்கம்.. ! 

ரசவாதம் என்பது போலி அறிவியல் (Pseudoscience)தான். மாயாஜாலம் மற்றும் புதிரான தத்துவம் அனைத்தும் ஒன்றிணைந்துதான் ரசவாதம் என்று அழைக்கப்படுகிறது. ரொம்பவும் துவக்க காலங்களில் இது ரொம்பவும் புகழ் பெற்றதாகவும் கூட இருந்தது. அதுவும் கிறித்துவத்துக்கு ரொம்ப காலம் முன்பிருந்து,பின்னால் 1700 வரை இந்த ரசவாதம், ரசனையுடன், பல கருத்து மோதல்களுடன் அனுமார் வால் போல நீண்டதுதான் மிச்சம். தங்கம் என்னும் உலோகம் பல வரலாறுகளைப் பிரட்டிப் போட்டிருக்கிறது. புதிய சரித்திரனகளைப் படைத்திருக்கிறது.ஆனால் தங்கத்தை மட்டும் ஒருத்தராலும் உருவாக்கவே முடியவில்லை .வேறு ஏதேதோ புதுப் புது உலோகங்களை உருவாக்கினார்கள். ரசவாத தொழிலில்/செயலில் ஈடுபட்டவர்களை ரசவாதிகள் என்று மக்கள் அழைத்தனர். ரசவாதிகள் மதிப்பு குறைவான அலுமினியம் போன்ற உலோகங்களிலிருந்து உயர்வகை/ மதிப்பு மிக்க உலோகங்களான தங்கம் , வெள்ளி போன்றவற்றை பலவித செய்முறைகளில் முயற்சி செய்தனர்.

வேதியலின்.. மூதாதையர்..ரசவாதம்..!



ரசவாதத்தில் தங்கம் மட்டுமா செய்தனர்?. இல்லவே இல்லை. அவர்கள் நோயின்றி வாழவும், சாகா வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் நீண்ட காலம், வாழ்வதற்கும் அமிர்தம் என்ற மருந்தையும் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை; இமாயலத் தோல்வியைச் சந்தித்தனர் இந்த விஷயத்தில். ஆனால் இந்த விஷயங்கள்தான், வேதியல் என்ற ஒரு அறிவியல் துறை துவங்க விதை போட்டது என்றே கூறலாம். வேதியலில் அடிப்படை தத்துவங்களை ரசவாதம் சொல்லித்தந்தது. எந்த தகவல்/கண்டுபிடிப்பு/தேடுதலில் வேதியலின் கரு உருவானது என்பது இன்று வரை விளங்காப் புதிராகவே உள்ளது. ஆனால் ரசவாதம் மூலமே, வேதியல் துறை வளர்ச்சி அடைந்தது.

பலநாடுகளிலும் சுவையான ரசவாதம்..!

ரசவாதம் பழங்காலத்தில் கிட்டததட்ட எல்லா நாட்டினராலும் முயற்சி செய்யப்பட்டது ஆதிகால மெசபடோமியா,பழமை மிகு எகிப்து, பெர்சிய, இந்தியா, ஜப்பான், கொரியா, சீனா,ரோம் மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் தங்கத்தைதாழ்ந்த உலோகங்களிலிருந்து உருவாக்க ஆசைப்பட்டு பல ஆய்வுகள் செய்தனர். இந்த நடைமுறை.சுமார் 3 000,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பிருந்து 18 ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. ஆனால் பலன் தங்கம் விளைவதில் மட்டும் பூஜ்யம்தான். ஆனாலும் கூட ரசவாதத்தின் பிதாமகர்கள் எகிப்தியர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த கட்டுரை குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இன்னும் இரு பகுதிகள் உள்ளன.
-s.mohana

No comments:

Post a Comment