சமுதாயப் பங்களிப்பு என்ற மைய நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் கல்வி இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த வாரம் கிராமக் கல்விக்குழு பயிற்சியினை தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் வருகை தந்த 6 பேர் வீதம் சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு அளித்தது. -பிப்ரவரி,20-அன்று அப்பயிற்சி குறித்து பரிசீலனைக்கூட்டம் கம்பத்திலுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.. கருத்தாளர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில்...
சென்னையில் கடந்த ஜனவரி,24,25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆனந்தராஜ், ஆசிரியர் பயிற்றுநர் முத்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனவரி,27ஆம் தேதி தேனி முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதுமிருந்து உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கிராமக்கல்விக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதியும் கலந்துகொண்டார். நமது அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன் குமார மங்கலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனை அடுத்து ஜனவரி,30,31 தேதிகளில் தேனி வட்டார வளமையத்தில் மாவட்ட அளவில் வட்டாரக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிச் சென்றார். மாவட்டக்கருத்தாளர்கள் தே.சுந்தர், ஆனந்தராஜ், முத்துராஜ் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
பிப்ரவரி,1,2 தேதிகளில் வட்டார அளவிலான பள்ளித்தொகுப்பு மைய கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார அளவிலான பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்களோடு இணைந்து அறிவியல் இயக்க நண்பர்கள் டி.கருணாநிதி-ஆண்டிபட்டி, குமரேசன்-தேனி, வி.ரமேஷ்-பெரியகுளம், ரதன் ஜிந்தாபாத்-மயிலை, ப.ஸ்ரீதர்-போடி, தங்கராஜ்-சின்னமனூர், எஸ்.தேவராஜன்-உத்தமபாளையம், க.முத்துக்கண்ணன்-கம்பம் பயிற்சியளித்தனர். மாவட்டச் செயலாளர்/கருத்தாளர் தே.சுந்தர் கம்பம், உத்தமபாளையம், தேனி, ஆண்டிபட்டி ஆகிய வட்டாரங்களில் கருத்துரை வழங்கினார்..
பிப்ரவரி 6 முதல் கருத்தாய்வு மைய அளவில் கிராமக்கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி துவங்கியது.. அறிவியல் இயக்க கருத்தாளர்கள்-வி.ரமேஷ்-பெரியகுளம் எட்வர்டு பள்ளி, எஸ்.கார்த்திகேயன் -10வது வார்டு பள்ளி ஆகிய இடங்களுக்கும் சின்னமனூர் தங்கராஜ் அப்பிபட்டி, கருக்கட்டாங்குளம், காலனி, சங்கராபுரம், அய்யம்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய இடங்களில் நடந்த பயிற்சிகளில் கலந்துகொண்டார். போடி.ஸ்ரீதர் கள்ளர் பள்ளி கிழக்கு, 10வது வார்டு பள்ளி,மேலச்சொக்கநாதபுரம், சிலமலை, ராசிங்காபுரம், 15ஆவது வார்டு நகராட்சி பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்றார். போடி.ராமதாஸ் கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை, கள்ளர் பள்ளி மேற்கு, 7வது வார்டு மற்றும் 10வது வார்டு பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொண்டார். உத்தமபாளையத்தில் எஸ்.தேவராஜன் பஜார், கரிமேட்டுப்பட்டி, இராயப்பன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு பயிற்சியளித்துள்ளார். தேனியில் குமரேசன் லட்சுமிபுரம் பள்ளியில் கலந்துகொண்டார். கம்பம் முத்துக்கண்ணன் மேலக்கூடலூர், க.புதுப்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம்-பார்க், கம்பம்-மெயின், எம்.எ.புரம் ஆகிய இடங்களுக்கும் இராஜசேகர் கம்பம்-சுங்கம், சுருளிப்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம்-மெயின், மேலக்கூடலூர் ஆகிய இடங்களுக்கும் கோபு பிரசன்னா மேலக்கூடலூர், சுருளிப்பட்டி, க.புதுப்பட்டி, கீழக்கூடலூர் ஆகிய இடங்களுக்கும் வெங்கடேசன் கே.கே.பட்டி, சின்னமனூர் காலனி, கருக்கட்டாங்குளம், முத்துலாபுரம் ஆகிய இடங்களுக்கும் சென்று பயிற்சியளித்தனர். மாவட்டக் கருத்தாளர் தே.சுந்தர் சுருளிப்பட்டி, முத்துலாபுரம் ஆகிய இடங்களில் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.
பரீசலனையின் போது கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியினை விட சிறப்பான அளவில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் பயிற்சியின் பெரும்பாலான நேரத்தை அறிவியல் இயக்க நண்பர்களே நடத்தியுள்ளனர்-மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். மக்களும் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். பெருமாபாலான இடங்களில் மதியத்தோடும் சில இடங்களில் மாலை 4 மணி வரையிலும் பயிற்சி நடைபெற்றுள்ளது. ஆசிரியர் பயிற்றுநர்களும் பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் முயற்சி செய்திருந்தால் மக்களை இன்னும் கூடுதலாக பங்கேற்க வைத்திருக்கலாம். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையான பள்ளிகளில் மக்கள் பங்கேற்பு-பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி முழு வளர்ச்சித் திட்டம் ஆகிய அம்சங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.. மாநிலத்தில்-மாவட்டத்தில்-வட்டார அளவில்- கருத்தாய்வு மைய அளவில் பயிற்சியின் மைய நோக்கமும் செயல்பாடுகளும் சிதைந்து கொண்டே வந்ததையும் காண முடிந்தது. பயிற்றுநர்களும் ஆசிரியர்களும் இதுவும் ஒரு பயிற்சி என்ற மனநிலையில் இருந்து மாறி-மக்களை பள்ளியின்பால் ஈர்ப்பதற்கும்-பள்ளிக்குத் தேவையான வளங்களைப்பெற்று வளர்ச்சியடையச் செய்வதற்கும்-மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவும்-தங்கள் பணியிடங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் ஏற்பாடு என்ற புரிதலோடு செயல்பட்டால் இந்த பயிற்சி மட்டுமல்ல எந்த பயிற்சியும் பயன்தரும். அரசுப்பள்ளிகள் என்பவை மக்கள் பள்ளிகளே.. அவர்களின் பங்கேற்பின் மூலமே அவற்றைக் காப்பாற்ற முடியும்.. அவர்களை உள்ளே விட்டால் தங்களுக்குத் தொந்தரவு, ஆபத்து என்று ஆசிரியர்கள் கருதும்வரை அது சாத்தியமாகாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே கருதுகிறேன்..
தேனி.தே.சுந்தர்
தேனி.தே.சுந்தர்
No comments:
Post a Comment