தேனி, மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ராஷ்ட்ர மத்திய சிக்ஷா அபியான் திட்டத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.. அதில் நேற்று-பிப்ரவரி,8,2012, பிற்பகல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தை எவ்வாறு எளிமையாகக் கற்பிப்பது என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.. அறிவியல் இயக்கம் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டது.. தேனி கிளைத்தலைவர் மா.மகேஷ் மற்றும் ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment