
- பெரியகுளம் அறிவியல் இயக்க நண்பர்களுக்கும அங்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்..
- அந்த பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி என்பதும், அவர்களுக்குத்தான் அறிவியல் இயக்க செய்திகள் சென்றடைவதும சிறப்பும், மகிழ்ச்சியுமாகும்.
- இன்னொரு சிறப்பு தகவல் என்னவென்றால், பெரியவர்களே குறிப்பு எடுக்கத் தயங்கும் காலகட்டத்தில், அந்த பிஞ்சுகள் நோட்டில், நான் பேசும் தகவல்களை குறிப்பு எடுத்தனர்.
- சுமார் 400 மாணவர்கள் என்றார் தலைமை ஆசிரியரும், பெரியகுளம் அறிவியல் இயக்க செயலருமான திருமிகு.ராம்சுந்தர். அனைவரும் கட்டுக்கோப்புடன், ஈடுபாட்டுடன் PPT ஐ கவனமாக கவனித்தனர் என்பது ஆச்சரியமான விஷயமே.
- வானவியல் கதையைப் பேசி முடித்ததும், நிறைய வினாக்கள் கேட்டனர். ஆனால் 8 ம வகுப்புகுட்பட்ட குழந்தைகளே.
- நான் வானில் படம் எடுத்து இணைத்திருந்த நிலா, வியாழன்,வெள்ளி படங்களைப் பார்த்து இந்த கோள்களை ராக்கெட்டில் சென்றா. அல்லது விமானத்தில் சென்று படம் எடுத்தீர்களா என்றும் கேட்டனர்.
- வீட்டுக்குச் செல்லும்போது, ஒவ்வொருவரும் நெருங்கி வந்து மெதுவாக, ரொம்ப நல்லா இருந்துச்சி மிஸ் , interesting ஆ இருந்ததுச்சி, ரொம்ப நன்றி, ரொம்ப தேங்க்ஸ், திரும்ப வருவீங்களா என்றனர்.. அரசுப் பள்ளி குழந்தைகள் .
- நலல விஷயங்களை, நன்றி சொல்லும் உணர்வு ஏற்படும்படி, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சொல்லிதந்திருக்கின்றனர். கற்றுக்கொடுத்த ஆசான்களுக்கு, பாராட்டுக்கள்.
- மனசுக்கு ரொம்பவே நிறைவாக இருந்தது. அவர்களின் செயலும், ஈர்ப்பும், கட்டுப்பாடும், ஆர்வமும்.
- அதன்பின், மதுரை அறிவியல் இயக்க,சிறகு பொறுப்பாளர் திருமிகு. நாராயணசாமி உதவியுடன் இரவு வான் நோக்கல் நிகழ்வு எட்வர்ட் நடுநிலைப் பள்ளியில்சிறப்பாக நடந்தது.
- நாராயணசாமி தொலைநோக்கி மூலம் வியாழன்,வெள்ளி கோள்களையும், நிலாவையும் காண்பித்தார்.
- நான் வானில் தெரியும் விண்மீன்களைக் பச்சை லேசர் உதவியுடன் காண்பித்து அவற்றின் பின்னணி, தொலைவு, வெப்பம், அளவு போன்றவற்றை சொன்னேன்.
- பொதுவாக வானில் 20 பிரகாசமான விண்மீன்கள் உண்டு.அவற்றில் 9 விண்மீன்களை 01 .02 .12 அன்று இரவு பார்த்தோம்.
- வேட்டைக்காரன்,பெரிய நாய், சிறிய நாய், ரிஷப விண்மீன் படலம், மிதுன விண்மீன் படலம், கார்த்திகை கன்னிகள், அகஸ்தியர், திருவாதிரை, மிருகசீரிஷம், ரைகல், பெல்லாட் ரிக்ஸ்,லீபஸ்,பெரும் சதுரம் எல்லாம் பார்த்தோம்.
- நிலவின் ஒளி அதிகம் இருந்ததால், மேஷம் தெரியவில்லை.
- எத்தனை பேர் வந்தனர் தெரியுமா? யாரும் மயக்கம் போட்டு விழுந்துவிட வேண்டாம்.சுமார் 900 பேர் வந்தனர். பெற்றோரும்,ஆசிரியர்களும் வந்தனர்.
- அனைவரையும், கட்டுக்கோப்புடன் தொலை நோக்கி பார்க்க வைத்தார், திரு. ராம்சுந்தர் அவர்கள்.சபாஷ் சாரே ..!
- அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள். நண்பரே, உங்களின் உதவியுடன், இயக்கம் மேலும் செழிக்கும்,,உங்களின் குழந்தைகளும்,, எளிதில் வளையக்கூடியவர்களாய் இருக்கின்றனரே..குழந்தைகளின் நெஞ்சில் வாழ்கிறீர்கள் என்பது நிதர்சனமாய் தெரிந்தது..இதோ பிடியுங்கள்..இன்னும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை.. தங்களின் குழுவுக்கும், மணிகண்டன்,ஆண்டவர், ஆனந்த கிருஷ்ணன் போன்றோருக்கும். மற்றும் அங்கிருந்த அனைவருக்கும்..
- நண்பர்களே.. மீண்டும், மீண்டும் மிக்க நன்றியும், மகிழ்ச்சிப் பகிர்வும் பெரியகுளம் டீமுக்கும், அவர்களை வழி நடத்தும் தேனி மாவட்ட செயலர் சுந்தருக்கும்.
- நன்றி..நன்றி..நன்றி..மனதுக்கு மகிழ்வும், நிறையும் தந்தமைக்கும், அன்பான, ஆர்வம் மிக்க கட்டுக்கோப்பான குழந்தைகளை உருவாக்கியதற்கும் .


மோகனா
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment