தினகரன்: கம்பம்: ஜன.23
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளையின் சார்பில், 2012 தேசிய கணித ஆண்டு துவக்கவிழா மற்றும் 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம்விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்கண்ணன் வரவேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம் மூலம் கலந்துகொண்டு தங்கள் ஆய்வை சமர்ப்பித்து இளம் விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்கள் சுரேந்தர், சுபாஷ், தீபன், தினேஷ்குமார், பகவதிராஜா மற்றும் ஆய்வுக்கு வழிகாட்டி ஆசிரியரான முத்துக்கண்ணன் ஆகியோருக்கு மாவட்ட உதவி வன அலுவலர் முத்துக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment