முதல் பக்கம்

Feb 13, 2012

கூடலூரில் அறிவியல் இயக்க பயிற்சி முகாம் நகரசபைத்தலைவர் தொடங்கிவைத்தார்

 
தினத்தந்தி: கூடலூர்: ஜன.31.

தேனி மாவட்டம், கூடலூர் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்ல பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு அறிவியல் இயக்கத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கே.பி.அச்சுதன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். கூடலூர் நகரசபைத்தலைவர் ஆர்.அருண்குமார் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தார். மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் அமலராஜன் பயிற்சியளித்தார். எளிய அறிவியல் பரிசோதனைகள், எண் விளையாட்டுகள், கணக்கும் இனிக்கும், அறிவியல் புனைகதைகள், வான்நோக்கல் ஆகிய தலைப்புகளில் பேசினார்கள். ஆசிரியர்கள் ஆர்.ராமர், எஸ்.நடராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் பேசினார்கள். முடிவில் இயக்கப் பொருளாளர் தனசேகரன் நன்றிகூறினார். பயிற்சி முகாம் ஏற்பாடுகளை ராஜ்குமார், ராஜசேகரன், ஈஸ்வரன், முரளி, ராஜேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment