அன்பு நண்பர்களே..
இன்று-பிப்ரவரி-5- போடி வட்டாரம், சிலமலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மூன்று துளிர் இல்லங்கள் துவங்கப் பட்டன. மூன்று பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40 குழந்தைகள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்கப் பாடல்கள், மகிழ்ச்சியூட்டும் சில செயல்பாடுகள், அறிவியல் சிறுகதைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் இன்றைய நிகழ்வுகள் அமைந்தன.. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்துகொண்டனர். மிகச் சரியாக ஒருமணி நேரம் மட்டும் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, ராமுத்தாய் மற்றும் அமராவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment