முதல் பக்கம்

Feb 14, 2012

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள்


தினத்தந்தி: கம்பம்: பிப்ரவரி,13

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 28_ந் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகளை தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மனித வாழ்வின் மாற்றத்திற்கு ஆற்றலின் பங்கு என்ற தலைப்பில் 5 பக்க அளவில் கட்டுரைப் போட்டியும் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 5 பக்கங்களுக்கு மிகாமல் ஆற்றலை அறிவோம் ஆற்றலால் உயர்வோம் என்ற தலைப்பில் கவிதை போட்டிகள் நடைபெறும். சுய உதவிக்குழு பெண்களுக்கு, பெண்கள் வாழ்வில் சொலவடை சொல்லும் போட்டி நடைபெறும். ஆசிரியர்கள், ஆர்வலர்கள் கதை மற்றும் புகைப்படஙளை அனுப்பலாம். கதை 10 பக்க அளவில் இருக்க வேண்டும். படைப்புகளை வருகிற 18ம் தேதிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குட்டியாபிள்ளை தெரு, கம்பம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment