ஜனவரி,27,2012 அன்று மாலை முதல் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.. பள்ளியின் தாளாளர் துவங்கிவைத்தார்.. ஆசிரியர் அ.சதீஷ் வரவேற்றுப்பேசினார்.. அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றினார்.. மதுரை.இல.நாராயணசாமி வான் நோக்கல் நிகழ்ச்சியை நடத்தினார்.. போடி அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர், கிளைப்பொருளாளர் கோ.ஜெகதீசன், மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி மற்றும் பேரா.ஆர்.பாண்டி உள்ளிட்ட நண்பர்களும் சுமார் 150 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.. பள்ளி முதல்வர் திருமதி.தேன்மொழி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்..
No comments:
Post a Comment