தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களிடையேயும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏராளமான பணிகளைச் செய்து வருகிறது.. இந்நிலையில் பிப்ரவரி,28-தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்ச்சிகள்- குறிப்பாக, பள்ளி,கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், அரங்கக் கூட்டங்கள், விஞ்ஞானி.சி.வி.ராமன் படத்துடன் கூடிய அட்டை அணிந்து பேரணிகள், குழந்தைகள் பட்டிமன்றங்கள், கண்காட்சிகள், படக்காட்சிகள், 6,7,8 மாணவர்களுக்கு திறனறிதல் போட்டிகள், விஞ்ஞானிகள்-மாணவர்கள் சந்திப்பு எனத் திட்டமிடப்பட்டுள்ளது..
மேலும் ஓவியம், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. 2012-சர்வதேச ஆற்றல் ஆண்டு என்பதால் அதனை மையப்படுத்தி பின்வரும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
வ.எண் | வகுப்பு/ பிரிவினர் | போட்டி | தலைப்பு | அளவு |
1. | 6,7,8 | ஓவியம் | எங்கும் ஆற்றல்.. எதிலும் ஆற்றல்.. | A3-சார்ட் பேப்பர்- 48 செ.மீ×34 செ.மீ |
2. | 9,10,11,12 | கட்டுரை | மனித வாழ்வின் மாற்றத்திற்கு ஆற்றலின் பங்கு.. | ஐந்து பக்க அளவில்... |
3. | கல்லூரி | கவிதை | ஆற்றலை அறிவோம்.. ஆற்றலால் உயர்வோம்.. | 5 பக்கங்களுக்கு மிகாமல்.. |
4. | சுய உதவிக்குழு | சொலவடை | பெண்கள் வாழ்வில் சொலவடை.. | தொகுப்பு.. |
5. | ஆசிரியர்கள் ஆர்வலர்கள் | கதை & புகைப்படம் | எல்லாம் ஆற்றல்மயம் | 10 பக்க அளவில் கதை/ 5 புகைப்படங்கள் |
குறிப்பு:
v மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் போட்டிகளில் பங்கேற்கலாம்..
v பிப்ரவரி,18ஆம் தேதிக்குள் தங்கள் படைப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்.8. குட்டியாபிள்ளைத்தெரு, கம்பம்-625516 என்ற மாவட்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்..
v ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஐந்து சிறந்த படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும்..
v மாநில அளவில் கலந்துகொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்..
v தேர்வான படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்..
v சிறந்த கட்டுரைகள்-படைப்புகள்-விஞ்ஞானச்சிறகு,விழுது, துளிர், ஜந்தர் மந்தர், அறிவுத்தென்றல் ஆகிய இதழ்களிலும் வெளியிடப்படும்..
அன்புடன்...
தே.சுந்தர்-மாவட்டச் செயலாளர்-9488011128
எம்.சிவக்குமார்- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தேசிய அறிவியல் தின போட்டிகள்- 9942688521
No comments:
Post a Comment