தினத்தந்தி: கூடலூர்: ஜன.22
தேனி மாவட்டம், கூடலூர் சுந்தரவேலவர் கோவில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய கணித ஆண்டு தொடக்கவிழா, இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கே.பி.அச்சுதன் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி கணித பேராசிரியர் முகமது ஷரீப் தேசிய கணித ஆண்டை தொடக்கிவைத்தார். மாவட்ட உதவி வன அலுவலர் வி.முத்துக்குமார் இளம்விஞ்ஞானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன் பரிசுகளை வழங்கினார். என்.எஸ்.கே.பி.பள்ளி தலைமை ஆசிரியர் பொ.கதிரேசன், கம்பம் வனக் காப்பாளர் ராஜசேகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கே.சுந்தர், பொருளாளர் ஓவியாதனசேகரன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் கல்வி துணைக்குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விக்ரம் சாராபாய் துளிர் இல்ல உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment