பிப்ரவரி,15ஆம் நாள், விஞ்ஞானி.கலிலியோவின் 403வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளையின் சார்பில் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவில் கலிலியோவின் பெயரில் துளிர் இல்லம் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார். கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக் கண்ணன் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வாழ்த்துரை வழங்கினார்.. அறிவியல் இயக்க கருத்தாளர் கோபு பிரசன்னா கலிலியோவின் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வானியல் கருத்தாளர் மதுரை.இல.நாராயணசாமி குழந்தைகளுக்கு தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் பயிற்சி அளித்தார். குழந்தைகளும் பெற்றோரும் தொலைநோக்கி மூலம் பல்வேறு கிரகங்களையும் விண்மீன் தொகுதிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ராஜசேகர், சத்யா, பிரபு, சுப்புராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் இரா.இராஜ்குமார் நன்றி கூறினார்..
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment