முதல் பக்கம்
Mar 25, 2011
கல்வியின் வெற்றியை தாய்மொழியே சாதிக்கும்!
துளிர்: அறிவியல் மாத இதழ்
நமது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
சுமார் 30 ஆண்டுகளாகதமிழ்வழியில்
பயிலும்குழந்தைகளிடையேஅறிவியல்
மனப்பான்மையை வளர்ப்பதற்காக
அழகிய தமிழில் ,எளிய நடையில்
குறைந்த விலையில் மாதந்தோறும் வருகின்ற
அறிவியல் மாத இதழ்தான் துளிர்.
அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும்
விதமாக கதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள்,
கோள்களின் நிலைகள் குறித்த விளக்கம் என
பலவிதமான செய்திகளைத் தாங்கி வரும்
துளிர் இதழை உங்கள் வீட்டுச் செல்லக்
குட்டிகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமா?
மாவட்ட அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களை
அணுகலாம்.அல்லது நேரடியாக மாநில
அலுவலகத்திற்கும் சந்தா தொகையை அனுப்பலாம்!
ஆண்டுச் சந்தா ரூ.75/-மட்டுமே.
ஆயுள் சந்தா ரூ.700/- மட்டுமே.
மாநில அமைப்பு முகவரி:
உங்களது மேலான விமர்சனங்களையும்
சிறந்த படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.
எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி
அன்றாட வாழ்வில் வேதியியல்
மாலை 3.30 மணிக்கு தேனி மாவட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில்
கருத்தரங்கம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன்
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்
செயலாளர் திருமிகு தே.சுந்தர் வரவேற்றுப்
பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க
மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன்
அன்றாட வாழ்வில் வேதியியல் என்ற தலைப்பில்
கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு க.முத்துக்கண்ணன்
துளிரின் உள்ளடக்கம் குறித்தும் அறிவியல்
இயக்க வெளியீடுகள் குறித்தும் பேசினார்.
பள்ளி ஆசிரியர் திருமிகு வேல்முருகன்
நன்றி கூறினார். சுமார் 250 மாணவ மாணவியர்
கலந்துகொண்டனர். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா
Mar 24, 2011
ஜந்தர் மந்தர்: இருமாத அறிவியல் இதழ்
அறிவியல் ஆர்வம் பெருக
துளிர் இதழ் துணைநிற்கிறது.
எங்களைப் போல
மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கில வழியில்
பயிலும் குழந்தைகளுக்கு
அறிவியல் இயக்கம் என்ன செய்யப்போகிறது
என நீங்கள் நினைப்பது எங்களுக்கு
தெரிகிறது அன்புக் குழந்தைகளே..!
ஆர்வமிக்க பெற்றோர்களே..!
இனிமேல் செய்யவேண்டியதில்லை.
ஏற்கனவே ஐஐடி, இந்திய கணித
அறிவியல் ஆய்வு மையம் ஆகியவற்றில்
பணிபுரியும் அறிவியல் இயக்க விஞ்ஞானிகளால்
ஆங்கிலத்தில் எளிய முறையில் சிறந்த தரத்தில்
வருகின்றஇருமாத அறிவியல் இதழே
ஜந்தர் மந்தர் ஆகும்.
நீங்கள் கருதுவது போல
துளிர் இதழில் வருகின்ற படைப்புகளின்
மொழிபெயர்ப்புகள் ஜந்தர் மந்தரில்
வருவதில்லை.
முற்றிலும் வேறுபட்டவை.
புதிய படைப்புகளே!
இதற்கான ஆண்டுச் சந்தா ரூ.90/-
ஆயுள் சந்தா ரூ.700/-
எங்க சார் சந்தா கட்டுவது?
இதோ இந்த முகவரிக்கு:
Mar 22, 2011
நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று உலக சிட்டுக்குருவி தினம்
‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு…
தென்றலே உனக்கென்ன சொந்த வீடு…’
என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித்
திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம்
வகிக்கிறது.
தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில்
அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில்,
சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட
மறக்கவில்லை.
உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம்
கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி,
காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க
வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு
பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை.
கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில்
கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு,
பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து
குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில்
பூச்சிகளை குருவிகள் உண்பதால், ‘விவசாயிகளின் நண்பன்’
என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன்
சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச்
சேர்ந்து உண்டு மகிழும்.
ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக
சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும்.
சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன்
அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக
ரசிக்கலாம்.
அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில்
ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல்
தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக
எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற
காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம்
அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.
* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி,
வீடு முழுவதும், ‘ஏசி’ செய்யப்பட்ட வீடுகளில்,
குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், ‘மீத்தைல்
நைட்ரேட்’ எனும் ரசாயனக் கழிவு புகையால்,
காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும்
பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும்
உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள்
பட்டினி கிடந்தே அழிகின்றன.
* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்
அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக்
பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால்,
ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு
பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன.
இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல்,
மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள்
90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன்
டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு,
குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும்,
கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில்
சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன.
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை.
விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில்
சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும்,
வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான
இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.
திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி
பேராசிரியர்ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி – பெண்
குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம்,
பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது.
கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை
போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது.
இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை
பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு ரெல்டன் கூறினார்.
மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது:
மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள்
இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில்
பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த
அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல்
போன் சேவைகள் அதிகரித்து வருவதால்,
சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன.
இவ்வாறு திலீப்குமார் கூறினார்.
குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில்
உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு
ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும்,
தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள்
மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள்
குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
. வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை
தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால்,
குருவிகள் கூடு கட்ட பயன்படும்.
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்
மார்ச் 6, 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev ரஷ்ய மொழி: Дми́трий Ива́нович Менделе́ев, (பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 27] 1834 – பெப்ரவரி 2 [யூ.நா. ] 1907, ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பெப்ரவரி 8, 1834 இல் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17வது கடைசி மகவாகப் பிறந்தார். 13வது வயதில் தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையீல் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855 இல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.1859 க்கும் 1861க்கும் இடையில் இவர் ஜெர்மனியின் ஹைடெல்பூர்க் நகரில் வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1861 இல் நிறமாலைகாட்டி (spectroscope) பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டர். இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 1862 இல் மெண்டெலீவ் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியரானார். 1863 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1865 இல் நீருடன் அற்ககோலின் சேர்க்கை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
[தொகு] ஆவர்த்தன அட்டவணை
மென்டெலீவ் ஆசிரியரான பின்னர் மாணவர்களுக்காக வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். வேதியியல் தனிமங்களின் இயல்புகளை வகைப்படுத்தும் போதே அவர் தனது ஆவர்த்தன அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.அணுத்திணிவு குறித்த பல தகவல்கள் கிடைத்தபோது அவர் தனக்கென பின்வரும் அட்டவணையைத் தயாரித்தார்:
Cl 35.5 | K 39 | Ca 40 |
Br 80 | Rb 85 | Sr 88 |
I 127 | Cs 133 | Ba 137 |
மார்ச் 6, 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த அட்டவணையை சமர்ப்பித்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத மூலகங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணைய வெளிப்படுத்திய சில மாதங்களின் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.
மேலும் ஆங்கிலத்தில் ( http://en.wikipedia.org/wiki/
இன்று சர்வதேச மகளிர் தினம்.
அன்பு நெஞ்சங்களே,
வணக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம். தியானோவை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
என்றும் தோழமையுடன்,
மோகனா.
பெண் ..கணிதவியலாளர்..தியானோ ..கி. மு 546..!
உலக வன தினம்
ஏ பிச்சுக்கா...குப்பாச்சி எங்கே இருக்கே?
'ஏ குருவி, சிட்டுக் குருவி...எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு....'என்று போகிற (அண்மையில் மறைந்துவிட்ட அற்புதப் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில்..) முதல் மரியாதை திரைப்படப் பாடலை யார்தான் கேட்டு ரசித்திருக்க மாட்டோம்? இளமைப் பருவங்களில் இயற்கையின் தோழர்களாகத் தொடங்கும் மனிதர்களின் வாழ்வில் பறவைகள் முக்கியமானவை. கண்ணுக்கும், கைக்கும் அடக்கமான செல்லப் பிஞ்சுக் குட்டியாகக் காட்சியளிக்கும் குருவிகள் வசீகரமானவை.
இப்படியான பறவைகளைத் தான் நமது நவீன வாழ்வுச் சூழல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இன்ன காரணம் என்று வரையறுக்க முடியவில்லை என்றாலும், நமது உணவு முறை, குருவிகளுக்கு ஒரு கூடு கட்டிக் கொள்ள இடம் தராத நவீன அடுக்ககங்களின் வடிவமைப்பு, குருவி போன்ற பறவைகளின் முக்கிய உணவான பூச்சி, புழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருவது., கான்கிரீட் உலகம் வெளியேற்றிக் கொண்டிருக்கும் புல் தரைகள், பூந்தோட்டங்கள், தலையில் தட்டிக் குறுக்கி வளர்க்கப்படும் தாவரங்களால் விடைபெற்றுப் போகும் நீண்ட நெடிய மரங்கள்....என பறவைகளுக்கு ஒவ்வாத புறவுலகில் தான் நாம் நம்மைக் குடியமர்த்திக் கொண்டு வருகிறோம்.
அலைபேசி தொடர்புக்காக அமைக்கப்படும் கோபுரங்கள் கூட, அவற்றின் அலைவீச்சு கூட குருவிகளின் இனப்பெருக்கத்திற்கு எதிராக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. நகர வாழ்விலும், நமது வேளாண்மையிலும் மிகையாகிக் கொண்டு வரும் வேதியல் பொருள்களும் ஒரு காரணம். இந்த காரணங்களைச் சொல்லும் ஹிந்து நாளேட்டின் சிறுவர்களுக்கான யங் வேர்ல்ட் இணைப்பில் அண்மையில் வந்திருக்கும் கட்டுரையில், ஈயம் பிரிக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டினால் வெளிவரும் புகையில் இருக்கும் மீதில் நைட்ரைட் கூட குருவிகளின் உணவான புழுக்களை ஒழித்துக் கட்டிவிடுகின்றன என்று சொல்கிறது. குருவிகள் இனத்தைக் காக்க வேண்டியது இப்போது விரிவான விவாதப் பொருளாகி வருகிறது.
உலகு முழுக்க இயற்கை நேயர்கள், மார்ச் இருபதாம் தேதியை, குருவிகள் தினமாக அனுசரிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழில் நாம் குருவி என்று வாய் நிறைய விளித்து மகிழும் இந்தச் செல்லச் சிட்டுக்கு, தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா, பிச்சுக்கா!கன்னடத்தில்? குப்பாச்சி. இந்தி மொழியில் கொரையா. குஜாராத்தி மக்கள் சாக்லி என்று அழைத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் பெயர் சிமானி. மேற்கு வங்கத்தில் சராய் பகி, உருது மொழியில் சிரியா, சிந்தியில் ஜிர்க்கி. நமக்கு, குழந்தையின் உதடுகளைக் குவித்து ஒயிலாகச் சொல்லும் குருவி...
வீட்டுச் சமையலுக்கே காணாத தானியங்களை எடுத்து, காக்கை குருவி எங்கள் சாதி..என்று மகாகவி, பறவைகளுக்காக இறைத்து வைப்பாராம். எளிய தோட்டம், சிறிய நீர்த்தொட்டி, சிந்திக் கிடக்கும் தானிய மணிகள், குறைத்துக் கொள்ளப்படும் வேதியல் பயன்பாடு...என நாமும் பறவைகளின் காதலர்களாக எத்தனையோ சாத்தியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
குஞ்சுகளைக் காப்பதில் தாய்க் குருவியும், தகப்பன் குருவியும் ஒன்று போல் ஆசையாயிருக்குமாம். குருவிகளைக் காப்பதில் மனித சமூகம் மட்டும் அலட்சியம் காட்டினால் எப்படி? பறவைகளுக்கு அந்நியமாகிவிட்ட மண்ணில், மனித இனம் மட்டும் தழைத்துவிட முடியுமா என்ன! மார்ச் இருபது, மானுட தினம் என்றே கொள்ள வேண்டும். சலீம் அலி இதைப் புரிந்து வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது.
எங்க போச்சு?
தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அம்மா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களை சம்மதிக்க வைத்து இந்த நகரத்திற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் கூடவே இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள முடிந்தது. இன்று அவனும், அவளும் அவரவர் அலுவலகங்களுக்கு கிளம்ப, குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர். வீட்டைப் பூட்டிக்கொள்ளவும், சமைத்திருந்த மதிய உணவையும், ஃபிளாஸ்கில் போட்டு வைத்திருந்த டீயைப் பற்றியும் அம்மாவிடம் சொல்லப்பட்டு இருந்தது. ரிமோட்டை இயக்கி எப்படி டி.வி பார்ப்பது என்றும், எந்தெந்த நம்பர்களில் எந்தெந்த சானல் என்றும் கூட விளக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தவிப்பாய் இருந்தது. வீட்டில் போன் இருந்தாலாவது அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. ஊரில் பேசவும், பழகவும் வீடுசுற்றி மனிதர்கள் இருப்பார்கள். தனியாய், உள்ளே பூட்டிக்கொண்ட வீட்டில் அம்மா என்ன செய்வார்களோ என உறுத்திக் கொண்டே இருந்தது.
சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும், நேரே வீட்டிற்கு போனான். குழந்தைகள் வந்திருந்தனர். அம்மா வாசலருகே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்னம்மா, எப்படியிருந்தீங்க.... என்ன சீரியல் பாத்தீங்க” என்றான் சிரித்தவாறு.
“எய்யா... முன்னால் எல்லாம் ஒங்க வீட்டுல எவ்வளவு சிட்டுக்குருவி உண்டு. ஜன்னல் வழியா அதுபாட்டுக்கு உள்ளே வந்து போகும். துணிக் காயப்போட்டு இருக்குற கொடியில வரிசையா உக்காந்து கத்தும். இந்த புங்க மரத்துல எப்பப் பாத்தாலும் அடைஞ்சு கிடக்கும். இப்ப ஒன்னையும் காணம். எங்க போச்சு?” என்றார்கள் வருத்தமாக.
Mar 20, 2011
இந்த உலகம் நமக்கு முன்பும் இருந்தது...
இந்த உலகம் நமக்கு முன்பும் இருந்தது. நமக்குப் பிறகும் இருக்கும். அப்படியிருக்க நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உலகை நாளை நம் குழந்தைகள் கையிலும் பேரப்பிள்ளைகள் கையிலும் எப்படி ஒப்படைக்கவிருக்கிறோம். இயற்கைச் சமநிலையைப் பற்றி,, சுற்றுச்சுழல் சீர்கேட்டைப் பற்றி,, இயற்கையின் மார்பறுத்து இரத்தம் உறிஞ்சும் மனிதனின் இலாப வேட்டை பற்றி,, சிறிதும் கவலைகொள்ளாத நாம் எதைச்சேர்த்து வைக்க நாளும் ஓடுகிறோம்?
2011 ஆம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. உலக அளவில் காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 33%மாக இருந்த இந்தியக் காடுகள் தற்போது 19.5%மாக குறைந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. உயிர்வளி உற்பத்தித் தொழிற்சாலைகளான காடுகளை அழித்து விட்டு எத்தகைய தொழிற்புரட்சிக்கு வித்திடப்போகிறான் மனிதன் என்பது புரிந்தபாடில்லை.
காடுகள் பாதுகாப்பு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் மரங்களைத் தாண்டி சிந்திக்க மறந்துவிடுகிறோம். காட்டுயிர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் என காடுகளுக்குள் இருக்கும் ஒரு உயிர்ப்பின்னலை நாம் நினைத்துப்பார்ப்பதில்லை. சொல்லப்போனால் காடுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த உயிர்ப்பின்னல்தான். எனவே காடுகள் பாதுகாப்பு என்பதில் மேற்குறிப்பிட்ட உயிர்ப்பின்னலை பாதுகாப்பது குறித்தும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
கல்வாரியா என்னும் ஒரு வகை மரம் தற்போது இல்லை. டோட்டோ எனும் ஒரு வகை பறவை இனமும் தற்போது இல்லை. (மனுசப் பய அழிச்சுட்டானப்பா அப்படின்றத தான் இப்படி சுத்தி வளச்சு சொல்ல வேண்டியிருக்கு). இவ்விரு அழிவுகளுக்கும் தொடர்பு உண்டு. கல்வாரியா மர விதைகளின் உறையானது கடினமானது. இம்மரத்தின் பழங்களை டோட்டோ பறைவைகள் உண்ணும். திறன் மிகுந்த அப்பறவையின் ஜீரண மண்டலம் அவ்விதையின் உறையை சிதைத்து விடும். பின்னர் கழிவோடு விதை வெளியேறும் போது புதிய கல்வாரியா மரம் முளைக்கத் துவங்கும். எனவே இம் மரங்களின் உற்பத்தியானது டோட்டோ பறவையைச் சார்ந்தே இருந்தது. டோட்டோ பறவையின் அழிவுக்குப் பிறகு கல்வாரியா மரங்களின் உற்பத்தியும் முடிவுக்கு வந்தது. மனிதனை நம்பி அல்லது சார்ந்து எந்த உயிரினமும் இல்லை ஆனால் எல்லா உயிரினங்களையும் சார்ந்தே மனிதன் இருக்கிறான். இந்த உண்மையை மனித இனத்திற்குப் புரியும் படி ஊதும் வி
கடந்த 60 ஆண்களுக்கு முன் 40,000 புலிகள் இருந்த இந்தியாவில் இன்று வெறும் 2,000 புலிகள் மட்டுமே உள்ளன. காடுகள் என்றாலே சிங்கம் புலி எல்லாம் ஒன்றாக இருக்கும் என நினைக்கும் நமக்கு இந்தியாவில் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் உள்ளன அதுவும் வெறும் 300 சிங்கங்களே உள்ளன என்ற தகவல் அதிர்வைத் தரும் செய்தியாக இருக்கிறது. 1948க்குப் பிறகு சீட்டா (சிவிங்கிப் புலி) இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டது. அழிந்து வரும் உயிரினங்களின் பெயர்கள் இடம்பெறும் Red Date Bookல் இந்திய உயிரினங்களின் பெய்ர்ப்படியல் நீண்டுகொண்டே செல்கிறது.
மனிதர்களின் பெருக்கத்திற்கேற்ப நகரங்கள் விரிவுசெய்யப்படுகின்றன. அதே போல் காடுகள் விரிவுசெய்யப்படுகின்றனவா. ஒரு யானைக்குட்டி புதிதாகப் பிறந்தால் 1 ஏக்கர் பரப்பளவுள்ள காடு கூடுதலாக தேவை என்று காட்டுயிர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறை அப்படி இல்லையே. அதனால் தான் உணவு தேடி அலையும் போது கூட்டம் கூட்டமாக இரயில் தண்டவாளங்களில் அடிபட்டும் காடுகளில் போதுமான உணவின்றியும் யானைகள் அதிக அளவில் இறக்கின்றன.
இவ்வாறான உதாரணங்களும் புள்ளி விவரங்களும் நிறைய உண்டு. நிற்க. திண்ண சோறு செரிமானம் ஆகல போல அதான் கூவுறான் என்பது போலத்தான் இயற்கையைப் பற்றி காடுகளைப் பற்றி பேசுபவர்களை இன்று நம் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது. ச.முகமது அலி, தியோடர் பாஸ்கரன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலர் தான் இயற்கைச் சிந்தனையாளர்களாகவும் அதை மையப்படுத்தி எழுதும் எழுத்தாளர்களாகவும் உள்ளனர். என்னுடைய நாவல் தமிழ்நாட்டிலேயே நாலு பேருக்குத்தான் புரியுதாம்னு பாராட்டு விழா மேடைகளில் பேசிக்கொள்ளும் கலை இலக்கிய அதிஅற்புத அறிவுஜீவி எழுத்தாளர்கள் எவரும் நம் பக்கம் நிற்கவோ நம் செயல்களில் களப்பணிகளில் துணைநிற்கவோ தயாரில்லை.
காட்டுயிர்களையும் அதன் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம் காலத்தில் விதைக்கப்பட வேண்டும். நம் பிள்ளைகளிடம்,, நம் உறவினர்களிடம்,, நம் குடும்பத்தில்,, நாம் இது குறித்துப் பேசத் துவங்குவோம். வகுப்பறைகளை இதற்கான களமாக பயன்படுத்துவது சமுகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு ஆசிரியரின் கடைமையாகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் பல்வேறு செயல்பாடுகளின் மூலமாக காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி மக்கள் இயக்கங்களை நடத்தி வருகிறது. நாளைய தலைமுறை குறித்து கவலையோடு சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் தன்னை அர்பணிப்போம்.,,
Mar 19, 2011
கடந்த 300 ஆண்டுகளில் 134 பறவை இனங்கள் அழிவு
கடந்த 300 ஆண்டுகளில்
134 பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. பிரிட்டனைச்
சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இவைகளில் 27 பறவை இனங்கள் 18-ம் நூற்றாண்டிலும், 51 பறவைபறவைபறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. மேலும் 625 பறவை இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள பறவை இனங்களில்பறவை இனங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளன. இந்தியாவில் வல்லூறு, நீர்பறவை போன்றவை அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 225 பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன. அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 32 பறவை இனங்களில் இனங்கள் 19-ம் நூற்றாண்டிலும், 56 இனங்கள் 20-ம் நூற்றாண்டிலும் அழிந்துபோயுள்ளன. இந்த நூற்றாண்டில் இதுவரை 3 அதிகபட்சமாக 1226
எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. இதுபோல பறவைகள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. ஆசிய – பசிபிக் பகுதிகளில் வசித்து வந்த பல பறவைகள் இடம் பெயர்ந்துள்ளன. வாழ்வதற்கு போதிய சூழ்நிலை இல்லாததே பல நூறாண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து பறவைகள் இடம்பெயரக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.விழிப்புணர்வு கருத்தரங்கம்
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2011,23:37
கூடலூர்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர் வ.உ.சி.,நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமையில் நடந்தது. அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்றார். "வனவளம் காப்போம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துளிர் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கவிஞர் ஓவியா தனசேகர் பரிசு வழங்கி பேசினார். அறிவியல் இயக்க
மாவட்ட செயலர் சுந்தர், ஆசிரியர்கள் பிரகலாதன், சிவமூர்த்தி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.