முதல் பக்கம்

Mar 17, 2011

புத்தகக் கண்காட்சி

மார்ச் – 10
புத்தகக் கண்காட்சி
2011- மார்ச் 10, வியாழக்கிழமையன்று வீரபாண்டி சௌராஸ்ட்ரா கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக்க் கண்காட்சி நடைபெற்றது.
     ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருமிகு சூரியன் அவர்கள் புத்தகங்களை வாங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்சி மற்றும் பி.எட் மாணவர்களிடம் ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கல்விசார் புத்தகங்களான எனக்குரிய இடம் எங்கே? ஆளுக்கொரு கிணறு, எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்குனீங்க? பள்ளிக்கூடத்தேர்தல், ஆயிஷா, எது நல்ல பள்ளி? ஆகிய புத்தகங்களின்  முக்கியத்துவம் குறித்து அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் எடுத்துரைத்தார். கல்விசார் புத்தகங்கள் மட்டும் சுமார் ரூ3500க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. கண்காட்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க நண்பர்கள் திருமிகு க.முத்துக்கண்ணன் மற்றும் பாஸ்கர் செய்தனர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் (பொ) திருமிகு பூபதி அவர்கள் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாட்டு உதவிகளைச் செய்தார். மாற்றுக் கல்வி குறித்த சிந்தனைகளை விதைத்த மகிழ்வோடு விடைபெற்றோம்.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

No comments:

Post a Comment